பெற்ற தந்தையை 25 துண்டுகளாக வெட்டி கூறு போட்ட மகன்! பதற வைக்கும் காரணம்!

இந்தியாவின் தலைநகர் டெல்லியில் சொத்து தகராறு காரணமாக தனது தந்தையை கொலை செய்து உடலை 25 துண்டுகளாக நறுக்கி பாலிதீன் பையில் போட்டு மறைத்து வைத்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


டெல்லியில் சொத்து தகராறு காரணமாக தனது தந்தையை கொலை செய்த அவரது மகனான அமன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். டெல்லியில் வசித்து வருபவர் சந்தேஷ் அகர்வால் 48, அவர் குடும்பத்துடன் அப்பகுதியில் நீண்ட நாட்களாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அவரது மனைவி மற்றும் இளைய மகன் ஆகிய இருவரும் மணாலியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்ற நிலையில், அமன்  மற்றும் சந்தேஷ் அகர்வால் ஆகிய இருவர் மட்டுமே வீட்டில் தனியாக தங்கியுள்ளனர்.

இந்நிலையில் இருவருக்கும் இடையே சொத்து குறித்த வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் ஆத்திரமடைந்த அமன் தனது தந்தையை பலமாக தாக்கியுள்ளார். உடனே அருகில் உள்ளவர்கள் ஏதோ சத்தம் கேட்கிறது  என அகர்வாலின் வீட்டை  பார்த்துள்ளனர் . அப்போது அங்கே சண்டை நடைபெறுவதை பார்த்த அவர்கள் உடனே அருகில் உள்ள காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வரும் முன்னரே, படுகாயமடைந்த அவரது தந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அமன் தனது நண்பர்களின் உதவியுடன் தன் தந்தையின் உடலை 25 துண்டுகளாக வெட்டி அதை பாலித்தீன் பைகளில் அடைத்து வெளியே கொண்டு செல்ல முயன்றுள்ளார். 

அப்போது அங்கு வந்த காவல்துறையினர் அமனை விரட்டிப் பிடித்து கைது செய்தனர். இதையடுத்து அவரது நண்பரான 3 பேர் சம்பவ இடத்தில் இருந்து தப்பித்து ஓடிவிட்டனர். தப்பி ஓடியவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இது ஒரு இது மணலியில் உள்ள அவரது மனைவிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது .இதுகுறித்து அமனை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.