குளிக்கச் சென்ற தாயை பின்தொடர்ந்து சென்று மகன் அரங்கேற்றிய கொடூரம்! நேரில் பார்த்து அதிர்ந்த தாய்!

திருச்சியில் குடிபோதையில் பெற்ற தாயை கொன்று விட்டு மகன் தலைமறைவான சம்பவம் அரங்கேறி உள்ளது.


ஹரிதாஸ்~சாந்தி தம்பதியின் மகனான குமரவேல் திருமணமாகி குழந்தையுடன் வசித்து வருகிறார். குடிப்பழக்கத்திற்கு அடிமையான குமரவேல் குடிப்பதற்காக அடிக்கடி பணம் கேட்டு வீட்டில் இருப்பவர்களை துன்புறுத்தி வந்துள்ளார். 

கடந்த 20ஆம் தேதி குளிக்க சென்றுகொண்டிருந்த தாயை பின்தொடர்ந்த குமரவேல் பாத்ரூமிலேயே தாயின் கழுத்தை நெரித்துக் கொல்ல முயன்றுள்ளார். குடிப்பதற்கு பணம் தர வேண்டும் என்றும் இல்லையென்றால் கொன்று விடுவேன் என்று மிரட்டியுள்ளார் இதை அடுத்து தாயின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை வந்து காப்பாற்றினர் 

2 தினங்களுக்கு முன்னர் குமரவேலு தந்தை ஹரிதாஸ் மருத்துவமனைக்கு சென்று விட்டார் அவரது மனைவியும் கைக்குழந்தையுடன் தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார் அப்போது வீட்டில் தாய் மற்றும் குமரவேல் மட்டுமே தனியாக இருந்தனர். 

குடிப்பதற்கு பணம் தருமாறு கேட்டு தாய் கொடுக்க மறுத்ததால் அவரை கொலை செய்து அருகில் உள்ள அறையில் போட்டு பூட்டி விட்டு குமரவேல் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார் பின்னர் தாய் வீட்டிற்கு சென்ற மனைவி வீட்டிற்கு வந்து மாமியாரை தேடியபோது எங்கும் கிடைக்கவில்லை இதுகுறித்து குமரவேலிடம் கேட்டபோது கடைக்கு சென்ற தாய் திரும்பி வரவில்லை என்று கூறியுள்ளார். 

இரவு வரை தேடியும் கிடைக்காததால் மீண்டும் வீட்டிற்குள் போடப்பட்ட அறையை பார்த்து மருமகளுக்கு சந்தேகம் வந்தது பின்னர் அக்கம்பக்கத்தினர் முன்னிலையில் அந்த அறையின் பூட்டை உடைத்து பார்த்தபோது மாமியார் சாந்தி சடலமாக கிடந்தார் அவரது தலையில் பல காயங்கள் இருந்தன . 

விஷயம் வெளியில் தெரிந்து விட குமரவேல் அங்கிருந்து உடனடியாக தப்பித்துவிட்டார் பின்னர் சடலமாக கிடந்த சாந்தியின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தது போலீஸ் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமறைவான குமரவேலை தேடி வருகின்றனர் 

போலீஸ் விசாரணையில் குடிப்பதற்கு பணம் கேட்டு குமரவேல் தாக்கி மிரட்டியது கொடுக்க மறுத்ததால் அவரை தாக்கியும் தலையணையால் அமுக்கியும் கொலை செய்துள்ளதை உறுதிப்படுத்தினார்