பெற்ற தாயை கொலை செய்து சடலத்துடன் வாழ்ந்து வந்த மகன்..! நெஞ்சை உலுக்கி எடுக்கும் சம்பவம்! அதிர வைக்கும் காரணம்!

மும்பை: தாயை வெட்டிக் கொன்றுவிட்டு, அந்த சடலத்துடன் படுத்து உறங்கிய மகன் போலீசில் பிடிபட்டான்.


மும்பையின் கிழக்கே உள்ள காத்கோபர் புறநகர்ப்பகுதியில் இந்த கொடூரம் நிகழ்ந்துள்ளது. இப்பகுதியை சேர்ந்த முகமது சபி சோஹைல் ஷெய்க் என்ற 33 வயது நபர் கடந்த டிசம்பர் 28ம் தேதி, தனது தாயுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தை தொடர்ந்து, அவரை வெட்டிக் கொன்றுவிட்டான். உடனே, ஏசியை அதிகப்படுத்தி வைத்துவிட்டு, அருகில் உள்ள தர்காவுக்குச் சென்று பாவமன்னிப்பு கேட்டிருக்கிறான்.  

பிறகு மீண்டும் வீட்டிற்கு வந்தவன், நள்ளிரவில் தாயின் சடலத்தை தலை வேறு, கால் வேறாக வெட்டி எடுத்துள்ளான். பின்னர், தாய் அணிந்திருந்த நகைகளை திருடிச் சென்று, அடகுக்கடையில் விற்று, தனது இருசக்கர வாகனத்தை கடனில் இருந்து மீட்டுள்ளான். நகை விற்ற பணத்தில், காதலியுடன் சேர்ந்து புத்தாண்டை கொண்டாடியிருக்கிறான்.

இப்படியே சில நாட்கள் சென்ற நிலையில், இரவு தினசரி எதுவுமே நடக்காதது போல, தாயின் சடலத்துடனே வீட்டில் படுத்து உறங்கி வந்திருக்கிறான். பிறகு, தாயின் தலை மற்றும் கால், உள்ளிட்ட உடல் பாகங்களை மூட்டை கட்டி, குர்லா நகரின் ரயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் வீசிவிட்டு சென்றிருக்கிறான். இதனை சிறப்பு விசாரணைக் குழு கண்டறிந்து, தற்போது குற்றவாளியை கைது செய்துள்ளனர்.  

இந்த கொலை சம்பவம் சில நாள் முன்பாக, அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.