முதலில் தாய்..! பிறகு நண்பன்..! இருவரையும் துண்டு துண்டாக வெட்டிக் கொன்ற மகன்..! மிரள வைத்த காரணம்!

தாய் மற்றும் நண்பனை கொலை செய்து நாடகமாடிய நபர் இரண்டு வருடங்கள் கழித்து போலீசிடம் சிக்கிய சம்பவம் கேரளாவில் நேர்ந்துள்ளது.


கேரளா மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்த ஜெயவல்லி என்பவருக்கு விர்ஜ் என்ற மகன் இருக்கிறார். மகன்-தாய் இருவருக்கும் சொத்து குறித்த தகராறு இருந்து வந்தது. தாய் விர்ஜூவிற்கு சொத்தை தரப்போவதில்லை என கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த விர்ஜ் நண்பன் இஸ்மாயில் உடன் சேர்ந்து தாயை இரவு தூங்கிக்கொண்டிருக்கையில் கொலை செய்துள்ளனர்.

கொலை செய்ததற்காக இஸ்மாயில் விர்ஜ் இடம் 2 லட்சம் பணம் கேட்டுள்ளார். இஸ்மாயில் அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு செய்ததால், மேலும் ஆத்திரமடைந்த விர்ஜ் நண்பன் இஸ்மாயிலையும் கொலை செய்துள்ளார். பின்னர் உடலை வெட்டி கடலோரத்தில் போட்டுள்ளார். 2017ஆம் ஆண்டு இந்த சம்பவம் நடந்தது.

விர்ஜை போலீஸ் தேடி வந்தது. அவர் தலைமறைவாக இருந்துள்ளார். தற்போது வெளியே வந்த விர்ஜ் போலீசிடம் சிக்கியிருக்கிறார். அவரிடம் விசாரிக்கையில், அனைத்து உண்மைகளும் வெளிவந்துள்ளன. இருவரையும் பணத்திற்க்காக கொலை செய்தது அம்பலமானது.