டெல்லியில் தனது தங்கையிடம் தவறாக நடந்துகொள்ள முயன்ற தனது தாயின் கணவனை கத்தியால் குத்திக்கொன்றவர் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
42 வயது மனைவியின் மகளுக்கு 27 வயது கணவன் செக்ஸ் சீண்டல்! நேரில் பார்த்த மகன்! பிறகு அரங்கேறிய கொடூரம்!

டெல்லி பாபா ஹரிதாஸ் நகரைச் சேர்ந்த 42 வயது பெண்ணின் கண்வர் 2011-ஆம் ஆண்டு மரணமடைந்ததைத் தொடர்ந்து கடந்த 2012-ஆம் ஆண்டு 27 வயதான மற்றொரு நபரைத் திருமணம் செய்துகொண்டார். அந்தப் பெண்ணுக்கும், 2-வது கணவனுக்கும் பிறந்த மகனுக்கு தற்போது 7 வயதாகும் நிலையில் பெண்ணின் முதல் கணவனின் மகன், மகள் ஆகியோர் அவர்களுடனேயே வசித்துவந்தனர்.
இந்நிலையில் 2-வது கணவன் தனது மனைவியின் மகளான 15 வயதுச் சிறுமியை அண்மைக்காலமாக தவறான கண்ணோட்டத்தில் பார்த்ததாகவும், அணுகியதாகவும் கூறப்படுகிறது. இதனைக் கவனித்துவிட்ட சிறுமியின் அண்ணன் தனது மாற்றாந்தந்தையிடம் தகராறில் ஈடுபட்டார். இருவருக்கும் இடையேயான வாக்குவாதம் முற்றியதில், ஆத்திரம் அடைந்த சிறுமியின் சகோதரர் தனது மாற்றாந்தந்தையை சரமாரியாக கத்தியால் குத்தி கொலை செய்தார்.
இதனைத் தொடர்ந்து காவல் நிலையத்தை தொலைபேசியில் தொடர்புகொண்ட அவர் தான் தனது மாற்றாந்தந்தையை கொலை செய்ததைத் தெரிவித்தார். இதையடுத்து அங்கு வந்த போலீசார் அந்த இளைஞரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.