நள்ளிரவில் ஆண் நண்பருடன் செல்போனில் கொஞ்சிய தாய்! நேரில் பார்த்த மகன் அரங்கேற்றிய பயங்கரம்!

நாகபட்டினம் அருகே நள்ளிரவில் தாய் செல்போனில் பேசியதால் கண்டித்த மகன் பின் வாக்குவாதம் முற்றியதால் தாயை மகனே கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது..


நாகப்பட்டினம், சமத்துவ புரம் அருகே கூலி வேலைப்பார்த்து வந்தவர் பரத், இவரது தந்தை உடல் நல குறைவால் கடந்த ஆண்டு உயிரிழந்தார். இந்த நிலையில் தொடர்ந்து பரத்தின் தாய் வெண்ணிலா இரவு நேரங்களில் தொடர்ந்து செல்போனில் பேசிவந்துள்ளார்.

இதனை அறிந்த பரத் , தாய் வெண்ணிலாவை பல முறை கண்டித்துள்ளார். இருப்பினும் செல்போனில் பேசுவதை நிறுத்தாத வெண்ணிலாவுடன் கடந்த 25 ஆம் தேதி இரவு இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. அப்போது நள்ளிரவு 1 மணி அளவில் வெண்ணிலா தனது ஆண் நண்பருடன் கொஞ்சி கொஞ்சி செல்போனில் பேசியுள்ளார். இதனால் மகன் பரதன் கோபம் அடைந்துள்ளார்.

ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த பரத் ,தாய் வெண்ணிலா தாக்கியதால் தலையில் காயம் பட்டு நிலை குழைந்த வெண்ணிலாவை அருகே இருந்த நாகை மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர், மேல் சிகிச்சைக்கு தஞ்சை கொண்டு செல்லபட்ட வெண்ணிலா நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனை அடுத்து மகன் பரத் ஐ கைது செய்து போலீசார் விசாரணை செய்துவந்தனர் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்ய்பட்டுள்ளது.