தந்தைக்கு பல பெண்களுடன் தகாத உறவு! கண்டுபிடித்த மகன் செய்த சம்பவம்! உசிலம்பட்டி பரபரப்பு!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பல பெண்களுடன் முறையற்ற உறவு வாழ்ந்து வந்த தந்தையை மகன் வெட்டிக் கொலைசெய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கரையான்பட்டி கிராமத்தில் வசித்து வந்தவர் குபேந்திரன். குடும்ப பிரச்சனை காரணமாக முதல் மனைவியை விவாகரத்து செய்த குபேந்திரன் 2வதாக ஏற்கனவே திருமணம் ஆன பெண்ணை திருமணம் செய்து வாழ்ந்து வந்தார். 2வதாக திருமணம் செய்த பெண்ணுக்கு 25 வயதில் முத்துப்பாண்டி என்ற மகன் உள்ளார். 

இந் நிலையில் 2வது மனைவியுடனும் பிரச்சனை ஏற்பட்டதால் வீட்டை விட்டு வெளியேறிய குபேந்திரன் வேறு இடத்தில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி இருந்தார். அப்போது அங்கு குள்ளபுரம் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும் குபேந்திரனுக்கும் பழக்கம் ஏற்பட்டு அவருடன் முறையற்ற உறவு வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த 2வது மனைவியின் மகன் முத்துப்பாண்டி குபேந்திரனுக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பதால் எங்கே சொத்துக்கள் கிடைக்காமல் போய்விடுமோ என்று பயந்து அவரை தீர்த்துக் கட்ட முடிவு செய்தார். இதை அடுத்து வீட்டில் தனியாக இருந்த தந்தை குபேந்திரனை கழுத்தை அறுத்துக் கொன்றுள்ளார் முத்துப்பாண்டி.

சம்பவம் அறிந்து வந்த போலீசார் குபேந்திரன் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். கொலை குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்த வைகை அணை போலீசார் முத்துப்பாண்டியே தந்தையை கொன்றதை உறுதி செய்தனர். பின்னர் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

சொத்துக்களை அனுபவிக்க நினைத்து செய்த முட்டாள்தனத்தால் எஞ்சிய வாழ்க்கையை சிறையில் அனுபவிக்க தொடங்கி உள்ளார் முத்துப்பாண்டி