மாமியாருக்கு கத்தரிக்கோலால் ஓங்கி ஒரு குத்து! அதிர வைத்த மருமகன்! பதற வைக்கும் காரணம்!

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் பகுதியில் சொத்து தகராறில் மாமியாரை கத்தரிக்கோலால் குத்தி கொலை செய்த மருமகனை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.


மைத்துனருடன் ஏற்பட்ட தகராறில் குறுக்கே மாமியார் தடுக்க வந்ததால் அவருக்கும் கத்திக்குத்து ஏற்பட்டது, இந்நிலையில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் பகுதியைச் சேர்ந்தவர் சாந்தி இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த முருகானந்தம் என்பவருக்கும் திருமணம் நடந்தது. திருமணம் முடித்து இருவரும் தனது மைத்துனர்  வீட்டில் தங்கி இருந்துள்ளனர். தனது மைத்துனர் பாலாஜி என்பவரது வீட்டில் முருகானந்தம் மற்றும் அவரது மனைவி ஆகிய இருவரும் பல வருடங்களாக வசித்து வருகின்றனர் .

இந்நிலையில் முருகானந்தம் பாலாஜியிடம் சொத்தில் பங்கு கேட்டு வந்துள்ளார். அவரிடம் சொத்தை பிரித்து தர மறுத்த பாலாஜி இந்த வீடு என் பெயரில்தான் உள்ளது எனவும் தெரிவித்துள்ளார் .இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த முருகானந்தம் பாலாஜி தீர்த்துக்கட்ட திட்டம் தீட்டியுள்ளார்.

ஒருநாள் இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு இருவரும் அடித்துக் கொண்ட நிலையில் முருகானந்தம் பாலாஜியை தாக்குவதற்காக தன்னிடமிருந்த கத்திரிக்கோலை எடுத்துக்கொண்டு சென்றுள்ளார். அப்போது குறுக்கே வந்த முருகானந்தத்தின் மாமியார் பானுமதி பாலாஜியை தாக்குவதை தடுத்துள்ளார்.

அப்போது எதிர்பாராதவிதமாக முருகானந்தத்தின் கையிலிருந்த கத்தரிக்கோல்  பானுமதியின் கழுத்தில் பாய்ந்தது. இந்நிலையில் பலத்த காயமடைந்த முருகானந்தத்தின் மாமியார் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். 

இதையறிந்த முருகானந்தம் உடனே அந்த இடத்தை விட்டு தப்பித்து ஓடிவிட்டார். இந்நிலையில் அவர் இறந்தது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் படுகாயம் அடைந்த பாலாஜியை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்,

மற்றும் இறந்த பானுமதியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மற்றும் இந்த கொலைக்கு காரணமாக இருந்த முருகானந்தம் தப்பியோடிய நிலையில் அவரை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.