மாமியாருக்கு மருமகனால் ஏற்பட்ட விபரீதம்! மனைவியை இல்லறத்துக்கு அனுப்பி வைக்க மறுத்ததால் கொடூரம்!

மனைவியை தன்னுடன் அனுப்பாத கோபத்தில் மாமியாரைக் கழுத்தறுத்து கொலை செய்த மருமகனை போலீசார் தேடி வருகின்றனர்.


காஞ்சிபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரியை அடுத்த ஆதனூரைச் சேர்ந்தவர் சதீஷ் குமார். இவருக்கும் மண்ணிவாக்கம் இந்திரா நகரைச் சேர்ந்த சுஷ்மிதா வுக்கும் அண்மையில் திருமணம் நடந்தது. வழக்கம் போல் கணவன் மனைவிக்கிடையே சண்டை ஏற்படவே சுஸ்மிதா கோபித்துக்கொண்டு தனது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

இதையடுத்து தனது மனைவியை அழைக்க சதீஷ்குமார் அங்கு சென்றுள்ளார். மனைவியை தன்னுடன் அனுப்பி வைக்குமாறு சதீஷ்குமார் கேட்டபோது அவரது மாமியார் ஜெயசித்ரா மறுத்து சண்டையிட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சதீஷ்குமார் மாமியாரை கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டார்.

இதுபற்றி ஓட்டேரி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. ஓட்டேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடி தலைமறைவான சதீஷ்குமாரை தேடி வருகின்றனர். இந்த கொலை சம்பவத்தால் மண்ணிவாக்கத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.