மாமியாரின் அந்த உறுப்பை கடித்து துப்பிய மருமகன்! மதுரையில் சம்பவம்! பதற வைக்கும் காரணம்!

மதுரை மாவட்டம் சமயநல்லூர் பகுதியில் தன் மனைவியுடன் ஏற்பட்ட சண்டையின் போது அவர்களை தடுக்க வந்த மாமியாரின் காதை கடித்து துப்பிய மருமகனை போலீசார் கைது செய்துள்ளனர்.


மதுரை மாவட்டம் சமயநல்லூர் காளியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் முத்துக்குமார். இவரது மனைவி கவிதா. இவர்கள் இருவரும் பல வருடங்களாக காதலித்து வந்த நிலையில் இருவீட்டாரின் ஒப்புதலுடன் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆன நிலையில் இவர்களுக்கு குழந்தை ஏதும் இல்லை.இதனால்தான் கணவன் மனைவிக்கும் இடையே பிரச்சனையே வெடித்தது. இதனால்தான் மாமியார் மருமகன் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளதாக தெரிகிறது.

இவர்கள், ஒரு கட்டத்தில் பிரிந்து வாழ ஆரம்பித்தனர். இருவரும் விவாகரத்து கோரி கோர்ட்டிலும் மனுதாக்கல் செய்துள்ளனர். இந்நிலையில் நேற்று முத்துக்குமார் கவிதா வீட்டிற்கு சென்றிருக்கிறார். அப்போது கணவன்,மனைவிக்குள் தகராறு ஏற்பட்டிருக்கிறது. சண்டை நீண்ட நேரம் நடைபெற்றதால் ஆத்திரமடைந்த முத்துக்குமார் பிரச்சனையை தடுக்க கவிதாவின் தாயார் லட்சுமி முன்வந்துள்ளார்.

ஏற்கனவே ஆத்திரத்தில் இருந்த முத்துக்குமார்  லட்சுமி குறுக்கே வரவும் ஆத்திரம் அதிகமாகி அவரது காதை இழுத்து பிடித்து கடித்து துப்பிவிட்டார். இதில் லட்சுமி வலியால் அலறி துடித்தார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து லட்சுமியை உடனடியாக மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் இச்சம்பவம் குறித்து அங்கு வந்த காவல்துறையினர் முத்துக்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.