கோடை வெயிலிலிருந்து உங்கள் மேனியின் அழகை காத்துக்கொள்ள சில வழிகள்!

கோடையில் தான் குளிர்காலங்களை விட அதிகமாக முக சருமத்தில் அழுக்குகள் தங்கும்.


எப்போது வெளியில் சென்று விட்டு வீடு திரும்பினாலும், திரும்பியதும் உடனே ஒரு முறை முகம் கழுவித் துடைக்க மறக்க கூடாது. முகம் கழுவும் போது முகத்தசைகளை அதிகம் அழுத்தி, தேய்த்து கழுவக் கூடாது. முகத்தில் தோலை அழுத்திக் கழுவினால் தோல் அழற்சி ஏற்பட்டு விரைவில் முகத்தில் தோல் எரிச்சலும், முகச் சுருக்கங்களும் தோன்றும்.

கோடை வெயிலினால் முகச்சருமம் அதிகளவு பாதிக்கப்படும். இதனால், எப்போதும் களைப்பான தோற்றமாக இருக்கும். இதற்காகப் பயன்படுத்தும் சன்ஸ்க்ரீன், லோஷன் போன்ற காஸ்மெட்டிக் விஷயங்கள்  சில நேரங்களில் ஒவ்வாமையை ஏற்படுத்திவிடும். கோடைக் காலத்தில், வெயிலின் தாக்கம் காரணமாகச் சருமத்தில் உள்ள மெலனின் அளவு அதிகரிக்கும். இதனால், சருமம் கறுத்துவிடும். சருமத்தின் நிறத்தை அதிகரிக்க தேன் பயன்படுகிறது. எனவே, தினமும் ஒருமுறை சுத்தமான தேனை முகத்தில் தடவி, சிறிது நேரம் ஊறவிட்டு, குளிர்ந்த நீரால் கழுவினால், கரும்புள்ளிகள் குறையும்.