பளிச்சென்ற முகத்தோட எப்பவுமே பிரெஷ்ஷா இருக்க இதோ சில வழிகள்!

வெயில் காலங்களில் சூரிய ஒளிபட்டு முகம் கருப்பாவது வழக்கம். பலருக்கு வெளியூர் சென்றால் கூட இதுபோன்ற நிலை ஏற்படும்.


தேன் ஒரு டீஸ்பூன், தக்காளிச்சாறு ஒரு டீஸ்பூன் எடுத்துக் கலந்து முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் பூச, கருமை நிறம் மாறி முகம் பளபளக்கும். வாழைப்பழத்துடன் பால் சேர்த்து நன்றாகப் பிசைந்து முகத்தில் பூசி இருபது நிமிடங்கள் ஊறவைத்துக் குளிர்ந்த நீரில் முகம் கழுவினால் முகம் பளபளக்கும்.

தேங்காய்ப் பால் இரண்டு ஸ்பூன், கடலை மாவு ஒரு ஸ்பூன் எடுத்து இரண்டையும் கலந்து பசைபோலாக்க வேண்டும். இந்தப் பசையை முகத்தில் பூசிக் கொண்டு உலர்ந்ததும் தண்ணீர் கொண்டு கழுவி விட வேண்டும். வாரம் இருமுறை இப்படிச் செய்தால் முகம் பிரகாசமாகும்.

வழுக்கைத் தேங்காயை நன்கு அரைத்து அதனுடன் சிறிதளவு இளநீர் கலந்து முகத்தில் கீழிருந்து மேல்நோக்கிப் பூசி, உலர்ந்ததும் நீர் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். இப்படித் தினமும் செய்து வந்தால் மாசு மருவின்றி முகம் மிளிரும், கரும்புள்ளிகள் இருந்தால் கூடிய விரைவில் அவை காணாமல் போய்விடும்.