கோவை ஈஷா யோகா மையத்திற்குள் அடிக்கடி சென்று வரும் ஆம்புலன்ஸ், அமரர் ஊர்தி...? சற்று முன் வெளியான விளக்கம்!

ஈஷா யோகா மையத்துக்கு ஆம்புலன்சும் அமரர் ஊர்தியுமும் அடிக்கடி வந்து செல்வதாக சில விஷமிகள் சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்பி வருகின்றனர்.


இது திட்டமிட்டு வேண்டுமென்றே செய்யப்படும் பொய் பிரச்சாரம். ஈஷா கிராமப் புத்துணர்வு இயக்கம், அரசு சுகாதாரத் துறை மற்றும் காவல் துறையுடன் இணைந்து 17 பஞ்சாயத்துக்களில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுப்பட்டு வருகிறது.

தற்போதைய சவாலான சூழலிலும் மக்களுக்கு சேவையாற்றி வரும் மருத்துவ பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் காவல் துறையினருக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறோம்.

இதற்காக, ஈஷாவின் வாகனங்கள் தொண்டாமுத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் மருத்துவ சேவைகளுக்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக ஏப்ரல் 5-ம் தேதி ஊடகங்களுக்கு ஒரு பத்திரிக்கையை செய்தியை அனுப்பி உள்ளோம். 

ஆகவே, ஈஷா தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் வதந்திகளை கொண்டு எவ்வித செய்தியும் வெளியிட வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம்.