சூரிய கிரகணத்தில் செங்குத்தாக நின்ற முட்டை..! ஆச்சரியத்தில் மூழ்கிய மக்கள்..! எங்கு தெரியுமா?

9 ஆண்டுகளுக்கு பின்னர் நேற்று நடைபெற்ற சூரிய கிரகணம் அதிக அளவில் மக்களால் பார்க்கப்பட்டது. இந்நிலையில் புவி ஈர்ப்பு விசைக்கு எதிராக நின்ற கோழி முட்டை சூரிய கிரகணத்தின்போது தரையில் ஒருபக்கமாக சாயாமல் நின்ற வீடியோ காட்சிகள் இந்தோனேசியா சமூகவலைதள பயன்பாட்டாளர்கள் வெளியிட்ட வீடியோ வைரலாகி வருகிறது.


பூமிக்கும், சூரியணுக்கும் இடையில், சந்திரன் வரும் நிகழ்வு தான் சூரிய கிரகணம், இந்த நிகழ்வு சுமார் 9 ஆண்டுகளுக்கு பின்னர் நேற்று நடைபெற்றது. உலகின் பல்வேறு நாடுகளிலும் சூரிய கிரகணம் நேற்று தெரிந்த நிலையில், மலேசியா, இந்தோனேசியாவில் உள்ள சமூகவலைதளங்களில் விநோத வீடியோக்களை வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ காட்சிகள் வைரலாகி அனைவரையும் ஆச்சிரியம் படுத்தியுள்ளது.  

மேலும், கிரகணத்தின்போது மட்டும் முட்டை இப்படி நிற்காது, அனைத்து நேரத்திலும் இவ்வாறுதான் நிற்கும் என மலேசிய அறிவியல் பல்கலைக்கழக வேதியியல் துறை முன்னாள் பேராசிரியர் தெரிவித்துள்ளார்.