சூரிய கிரகணம்! காலை 6 மணிக்கு வந்து குவிந்த உணவு ஆர்டர்! ஸ்விக்கி வெளியிட்ட தகவல்!

சூரிய கிரகணம் சந்திர கிரகணம் குறித்து அறிவியல் சார்ந்த பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஏற்படுத்தப்பட்டு வரும் நிலையில், கோவை நகரில் நேற்று காலை 6 மணி முதல் 8 மணிக்குள் 80 சதவீத காலை உணவுக்கான டிபன் ஆர்டர்கள் பெறப்பட்டுள்ளன.


Swiggy நிறுவன ஊழியர் ஒருவர் கூறுகையில் இதுபோன்ற ஆர்டர்கள் காலை 6 மணி முதல் 8 மணி வரை நாங்கள் பார்த்ததே இல்லை என்று கூறியுள்ளனர். குறிப்பாக படித்தவர்கள் டாக்டர், அரசு அதிகாரிகள், ஆசிரியர்கள் என அனைத்துத் தரப்பு மக்களும் 8 மணிக்கு முன் காலை உணவு ஆர்டர் செய்து அவற்றை பெற்றுள்ளனர்.

கோவை மாவட்ட ஓட்டல் உரிமையாளர் சங்கத்தின் செயலாளர் சிவக்குமார் கூறுகையில் நேற்று காலை 8:00 am till 11:00 am வணிகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்றும். மற்ற நாட்களில் மேற் குறிப்பிட்ட நேரத்தில் அதிக அளவில் ஆர்டர்கள் காணப்படும். ஆனால் நேற்றைய தினம் 30 சதவீதத்துக்கும் குறைவான அளவிலேயே 8 மணி முதல் 11 மணிக்குள் ஆர்டர்கள் பெறப்பட்டன என்றார்.