ஒரு நாளைக்கு 10 மணி நேரம் குளிக்கணும்! 3 சோப் காலியாகும்! சாப்ட்வேர் என்ஜினியரின் நூதன நோய்!

பெங்களூரை சேர்ந்த ஐடி ஊழியர் ஒருவர் வினோத நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்.அதன் காரணமாக ஒரு நாளைக்குப் 10 முறை குளிக்கும் நிலைக்கு ஆளாகியுள்ளார்.


பெங்களூரில் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வரும் நபர் OCD (Obsessive Compulsive Disorder)  என்னும் வினோத நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்.இந்த நோயின் அறிகுறி ஒருவர் செய்த செயலை மறந்து திரும்பத் திரும்ப அதே செயலை செய்ய வைக்கும். இந்நிலையில் இவருக்கு ஏற்பட்ட இந்த பிரச்சினை தொடர்பாக இவரது மனைவி பல்வேறு மருத்துவர்களிடம் அறிவுரை கேட்டு எந்த ஒரு தீர்வும் கிடைக்காத நிலையில்,

தற்போது அவருக்கு நோயின் தீவிரம் சற்று அதிகமாகவே இருந்து வருகிறது. இதில் ஒரு நாளைக்கு 10 முறை குளிப்பதாக அவரது மனைவி தெரிவித்துள்ளார்.3 சோப்புகள் மற்றும் ஒரு டஜன் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளார். அதிகாலை 3 மணிக்கு எழுந்து குளிக்க செல்லும் அவர் 6 மணிவரை குறிப்பதாகவும் பின்னர் அலுவலகத்திற்கு சென்று மாலை வீட்டிற்கு வந்ததும் சுமார் 4 மணி நேரம் குளிப்பதே செலவிடுவதாக தெரிவித்துள்ளார்.

இதனால் ஒரு நாளைக்கு 3 சோப்புகள் மற்றும் ஒரு டஜன் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தி வருவதாக தெரிவித்துள்ளார். தினமும் அதிக நேரம் குளிப்பதால் அவருக்கு சரும பிரச்சனை ஏற்பட்டு வருவதாகவும் அவரது மனைவி தெரிவித்துள்ளார். இந்நிலையில் இந்த நோயின் தீவிரத்தை உணர்ந்த அவரது மனைவி கணவரிடமிருந்து விவாகரத்து பெற்று தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். இந்நிலையில் அந்த நபரின் தாய் அவரை தற்போது கவனித்து வருகிறார்.

இந்நிலையில் பல்வேறு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று நோயை குணப்படுத்த முடியாத நிலையில் அவரது தாய் மேல் சிகிச்சைக்காக மற்றொரு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றுள்ளார்.அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் நோயின் தீவிரத்தை உணர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். விரைவில் குணமடைந்து விடுவார் எனவும் மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.