ஆன்லைனில் வாங்கிய விஷம்..! முதலில் மனைவி..! பிறகு இரட்டை குழந்தைகள்..! சாஃப்ட்வேர் என்ஜினியர் அரங்கேற்றிய பயங்கரம்!

இந்தூர்: குடும்பத்தினருடன் சேர்ந்து, சாஃப்ட்வேர் என்ஜீனியர் ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள, செஹோர் அருகே உள்ள கிரஸெண்ட் ரிசார்ட்டில்  ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கூட்டாக தற்கொலை செய்துகொண்டதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில், அங்கு வந்த போலீசார் உயிரிழந்து கிடந்த நபர்களின் சடலத்தை மீட்டு, விசாரணை நடத்தினர்.

அப்போது, அந்த குடும்பத்தின் தலைவராக உள்ளவருக்கு 44 வயது என்றும், அவர் இந்தூரில் உள்ள சாஃப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த நிலையில், சமீபத்தில் வேலையிழந்தார் என்றும் தெரியவந்தது.  

மேலும், அவரது மனைவி ஆன்லைன் வர்த்தக நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்தாலும், குடும்பச் செலவை சமாளிக்க முடியாமல் திணறி வந்துள்ளனர். இதையடுத்து, கணவன், மனைவி இருவரும் தங்களது குழந்தைகள் 2 பேருடன் சேர்ந்து விஷம் குடித்து தற்கொலை செய்ய தீர்மானித்தனர்.

இதற்காக கிரஸெண்ட் ரிசார்ட்டி ரூம் வாடகைக்கு எடுத்தவர்கள், ஆன்லைனில் சோடியம் நைட்ரேட் ஆர்டர் செய்து வாங்கி, அதனை குடித்து, தற்கொலை செய்துகொண்டனர்.