கோடி கோடியாய் கோனியில் பணம்! சிக்கிட்டாரய்யா துரைமுருகன்! அடுத்த ரெய்டு ஸ்டாலின் வீடு?

நான் பனங்காட்டு நரி, இந்த ரெய்டு சலசலப்புக்கெல்லாம் அஞ்ச மாட்டேன் என்று வீராவேசமாக பேட்டி கொடுத்தார் தி.மு.க. பொருளாளர் துரைமுருகன். ஏனென்றால், 30ம் தேதி நடைபெற்ற ரெய்டில் சில லட்சங்களும் ஆவணங்களுமே சிக்கியிருந்தன. அதனால் பந்தாவாக பேட்டி கொடுத்தார்.


ஆனால், எடுத்துப்போன ஆவணங்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட அடுத்தகட்ட சோதனையில் கட்டுக்கட்டாக பணம் அள்ளப்பட்டிருக்கிறது. ரெய்டு டீம். வேலூர் மாவட்டம் காட்பாடி கிறிஸ்தியான் பேட்டையில் உள்ள கல்லூரி, தி.மு.க. முன்னாள் மாவட்டச் செயலாளர் தேவராஜ் வீடு போன்ற இடங்களில் ரெய்டு தொடர்ந்து நடத்தப்பட்டது.. 

இந்த ரெய்டு நடத்தப்படும் தகவல் முன்கூட்டியே கிடைக்கப்பெற்று துரைமுருகனுக்குச் சொந்தமான கிங்க்ஸ்டன் காலேஜியில் இருந்து வேலூரில் உள்ள ஒரு சிமெண்ட் குடோனுக்கு ஏதோ கடத்தப்பட்டதாம். இந்தத் தகவல் தெரியவந்ததும், அங்கேயும் தேர்தல் அதிரடிப் படையும்,., வருமான வரித்துறையும் லோக்கல் போலீஸுடன் ரெய்டு நடத்தியது. இந்த ரெய்டில்தான் அட்டைப்பெட்டி மற்றும் சாக்குகளில் கட்டிவைக்கப்பட்ட கோடிக்கணக்கான பணம் சிக்கியுள்ளது. 

இந்தப் பணம் எங்கெல்லாம் யாருக்கெல்லாம் எவ்வளவு கொடுக்க வேண்டும் என்று தெளிவாக எழுதி வைக்கப்பட்டதையும் பிடித்திருக்கிறார்கள். அதனால் துரைமுருகன் இனிமேல் எங்கேயும் தப்பிக்கவே முடியாது என்கிறார்கள்.

அதைவிட, தேர்தலுக்கு முதன்முறையாக பணம் கொடுக்கலாம் என்று திட்டமிட்டிருந்த தி.மு.க.வின் தேர்தல் பிளானை இனிமேல் செயல்படுத்தவே முடியாது என்பதால் ஒட்டுமொத்த தி.மு.க.வும் அமைதியாக இருக்கிறது.

அதேநேரம் இன்னொரு விஷயமும் இப்போது றெக்கை கட்டி பறக்கிறது. அதாவது துரைமுருகனிடம் சிக்கியிருக்கும் ஆதாரத்தின் அடிப்படையில் அடுத்து ஸ்டாலின் வீட்டிலும் ரெய்டு நடத்த வாய்ப்பு இருக்கிறதாம். பரிதாபமா இருக்கே நிலவரம்.