ஆளும் கட்சி நிர்வாகிகளிடம் சிக்கிய பெண் அதிகாரி! ஓட ஓட வெளுத்த விபரீதம்! வைரல் வீடியோ! அதிர வைக்கும் காரணம்!

தெலுங்கானாவில் மரக்கன்று நட சென்ற வனத்துறை அதிகாரியை கட்டையால் அடித்து தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியினர் விரட்டினர்.


கம்மம் பகுதியில்   மரகன்று நடவதற்க்கான பணிகள் நடைப்பெற்று வந்தது. ஆளும் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி எம்.எல்.ஏவின்  ஆதரவாளர்கள் தொடர்ந்து இடையூறு செய்த வந்தள்ளனர்.

இந்த நிலையில் டிராக்டர் உதவியுடன் நிலத்தை சமன் செய்யும் பணிகள் நடைபெற்று வந்துள்ளது.அப்போது வனத்துறை அதிகாரி அனிதா உள்ளிட்ட துறைசார்ந்தவர்கள் இது சார்ந்த வேலைகளில் ஈடுப்பட்டிருந்த போது எம்.எல்.ஏவின் ஆதரவாளர்கள்  எதிர்ப்பாராத விதமாக அங்கு வந்து அவர்களை தாக்க முற்ப்பட்டனர்

மேலும் பெண் என்றும் பாராமல் அனிதாவை சரமாரியாக கையில் கிடைத்த கட்டையை கொண்டும் தாக்கியுள்ளனர். இதனால் படுகாயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிலும் கடந்த சில நாட்களாக வெளி மாநிலங்களில் அரசு அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் அதிகமாகி வருகிறது.

மேலும் அந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகி வருகிறது.