உங்கள் தம்பியிடம் இப்படித்தான் வெட்கப்படுவீர்களா? தமிழச்சியை கேள்விகளால் தொலைத்து எடுக்கும் நெட்டிசன்கள்!

நீங்கள் அழகாக இருக்கிறீர்கள் என்று உங்கள் தம்பி உங்களை பார்த்து கூறுவாரா? அப்படிக் கூறினாலும் நீங்கள் பதிலுக்கு வெட்கப்படுவீர்களா? என்று தமிழச்சி தங்கப்பாண்டியனின் நோக்கி கேள்விகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.


தேர்தல் பிரச்சாரத்தின்போது தமிழச்சி தங்கபாண்டியனை அழகான வேட்பாளர் என்று உதயநிதி கூறியது போது கூட பெரிய அளவில் சர்ச்சைகள் ஏற்படவில்லை. ஆனால் உதயநிதிக்கு தான் அக்கா போன்றவள் இன்று தமிழச்சி கூறிய பிறகு சர்ச்சைகள் அதிகரித்துள்ளது.

தமிழச்சி தங்கப்பாண்டியன் அழகான வேட்பாளர் என்று உதயநிதி கூறியதைத் தொடர்ந்து அவர்கள் இருவரையும் இணைத்து ஏராளமான மீம்ஸ்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன. இந்த மீம்ஸ்களை பார்த்து தமிழச்சி தங்கபாண்டியன் கடும் எரிச்சல் அடைந்துள்ளார்.

மீம்ஸ் உருவாக்குபவர்களுக்கு தன்னுடைய பதில் என்று அவர் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் உதயநிதி தன்னுடைய தோற்றத்தை அழகு என்று கூறவில்லை எனவும் தன்னுடைய பேச்சுத் திறன் மற்றும் தமிழைத்தான் அழகு என்று கூறியதாகவும் தமிழச்சி விளக்கம் அளித்திருந்தார்.

அதுமட்டுமல்லாமல் உதயநிதி தனக்கு தம்பி போன்றவர் என்றும் தான் உதயநிதிக்கு அக்காள் போன்றவர் என்றும் தமிழச்சி விளக்கம் வேறு கொடுத்திருந்தார். இதனால்தான் சமூக வலைதளங்களை பின்பற்றும் பலரும் எரிச்சலடைந்து தமிழச்சியை நோக்கி பல்வேறு கேள்விகளை முன்வைக்க ஆரம்பித்துள்ளனர்.

உங்கள் தம்பி அழகான வேட்பாளர் என்று உங்களை கூறினார் என்று நீங்கள் கூறுகிறீர்கள் அதுவும் உங்களுடைய கல்வியையும் பேச்சுத் திறமையும்தான் அழகு என்று உங்கள் தம்பி கூறியதாக நீங்கள் கூறுகிறீர்கள் அப்படி என்றால் அதற்கு நீங்கள் ஏன் வெட்கப்பட வேண்டும் என்று நியாயமாக கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன. உங்கள் உடன்பிறந்த தம்பி உங்களை நீங்கள் அழகாக இருக்கிறீர்கள் என்று கூறினால் இப்படித்தான் வெட்கப்பட்டு முகத்தை மறைப்பதால் என்றும் தமிழச்சியை கேள்விகளால் தொலைக்கின்றனர்.

மேலும் உதயநிதி உங்களுடைய தோற்றத்தை அழகு என்று கூறவில்லை என்றால் எதற்காக சிரித்தபடியே அதனைக் கூற வேண்டும் என்றும் கேள்விகளை முன்வைக்கின்றனர். இதற்கெல்லாம் உதயநிதியும் தமிழச்சி தங்கபாண்டியனும் தான் பதிலளிக்க வேண்டும்.