கவிஞர் தாமரை பொறுக்கியா? டென்ஷனாகும் சமூக ஆர்வலர்கள்!

போராளி என்பவர் பொதுவாழ்விலும் தூய்மையாக இருக்கவேண்டும் என்று, ராஜேஸ்வரிக்கு ஆதரவாக கவிஞர் தாமரை பதிவு போட்டார்.


ஏனென்றால், தியாகு என்ற போராளியால் அவரும் ஏமாற்றப்பட்டவர். தியாகுவால் தான் ஏமாந்துபோனது குறித்து ஏராளமாக எழுதியும், போராட்டம் நடத்தியும் வந்திருக்கிறார் கவிஞர் தாமரை. ஆனால், முகிலனுக்கு அவர் ஆதரவு குரல் கொடுத்த காரணத்தால், அவரை கேவலப்படுத்தும் வேலையில் சில சமூக ஆர்வலர்கள் களம் இறங்கியிருக்கிறார்கள்.

அவர்கள் இணையத்தில் உலவவிட்டுள்ள செய்திதான் இது. கவிஞர் தாமரையை புண் படுத்தினால், முகிலன் போராளியாக அறியப்படுவார் என்பதுதான அவர்களது பதிவுக்குப் பின்னே இருக்கும் நோக்கம் என்று எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது. தியாகு உங்களை பொறுக்கினாரா? அல்லது நீங்கள் அவரை பொறுக்கினீர்களா தாமரை? நீங்கள்தானே அவரது எழுத்தில் உங்களை பறிகொடுத்தாக அவருக்கு கடிதம் எழுதினீர்கள்? 

நீங்கதானே அவரைத் தேடிச் சென்று சந்தித்தீர்கள்? நீங்கதானே வாழ்ந்தால் அவரோடுதான் வாழ்வேன் என்று புலம்பினீர்கள்? நீங்கதானே மணமானவர் என்று தெரிந்தும் தியாகுவை திருமணம் செய்து கொண்டீர்கள்? சொல்லுங்கள் தாமரை! தியாகுவா உங்களை பொறுக்கினார்? எத்தனை கேவலமான பொறுக்கி நீங்கள் என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்கள்.

பொதுவாழ்க்கையிலும் தூய்மையாக இருக்க வேண்டும் என்று சொல்வது தப்பா..?