பூதம் போன்ற பனிமனிதன் நடமாட்டம்! இந்திய ராணுவம் வெளியிட்ட அதிர்ச்சி புகைப்படம்!

நேபாளத்தின் இமயமலை தொடரின் மக்காலு முகாம் அருகே எட்டி என்று அழைக்கப்படும் பனிமனிதன் நடமாட்டம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


பனிப்பகுதிகளில் எட்டி என்ற மிக பெரிய பூதம் போன்ற பனிமனிதர்கள் இருப்பதாக காலம் காலமாக கூறப்பட்டு வருகிறது. இந்த பனிமனிதனை பார்த்ததாக பலரும் கூறியுள்ளனர். 

ஆனால் அதனை யாராலும் உறுதிப்படுத்த முடியவில்லை இந்த நிலையில் நேபாளத்தின் இமயமலை தொடரில் உள்ள மக்காலு முகாமில் இருக்கும் இந்திய ராணுவ வீரர்கள் எட்டி குறித்து புதிய தகவல் வெளியிட்டுள்ளனர்.

முகாமுக்கு அருகே எட்டி எனும் பனி பூதத்தின் கால்தடத்தை மலையேறும் பயிற்சியின் போது இந்திய வீரர்கள் கண்டறிந்துள்ளதாக இந்திய ராணுவம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. அந்த கால்தடங்கள் 32 அங்குலங்கள் நீளமும் 15 அங்குலங்கள் அகலமும்  இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பனிமனிதர்களை மக்காலு மற்றும் புரான் தேசிய பூங்கா அருகே ஏற்கனவே பார்த்துள்ளதாக சிலர் கூறியுள்ளதாகவு ட்விட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.