முதலையின் வாயிற்குள் நுழைந்து படம் எடுத்த பாம்பு! பிறகு நேர்ந்த விபரீதம்!

ஃபுளோரிடா: முதலையின் வாயில் இருந்து தப்பிக்க, பாம்பு ஒன்று போராடுவது பற்றிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பகிரப்படுகிறது.


ஜெஸ்ஸி மற்றும் லிண்டா வாரிங் என்ற 2 வன உயிரின புகைப்பட கலைஞர்கள், ஃபுளோரிடாவில் உள்ள லேக்லேண்ட் பகுதியின் சர்கிள் பி பார் ரிசர்வ் இடத்தில் நடந்து சென்றுள்ளனர். அப்போது, ஒரு சம்பவத்தை பார்த்து, உடனடியாக, புகைப்படம் பிடித்து, அதனை வெளியிட்டு, பாராட்டுகளை பெற்று வருகின்றனர்.

ஆம். அதாவது, முதலை ஒன்று, தனது வாயை அகல திறந்தபடி, பாம்பு ஒன்றை பிடித்து விழுங்குகிறது. ஆனால், அதில் இருந்து தப்பிக்க, பாம்பு மிகக் கடுமையாகப் போராடுகிறது. எனினும், பாம்பின் போராட்டம் பலிக்கவில்லை.

அதனை ஒரே கடியில் சப்பென சட்னியாக்கி முதலை விழுங்கிவிட்டது. இந்த காட்சிகளை மிக தத்ரூபமாக, படமெடுத்த ஜெஸ்ஸியும், லிண்டாவும், அதனை ஃபேஸ்புக்கில், பகிர்ந்துள்ளனர்.  இதனை பலரும் வைரலாக தற்போது ஷேர் செய்து வருகின்றனர்.