இரண்டு தலை நாகம்! காண்போரை பீதி அடைய வைக்கும் புதிய உயிரினம்!

நியூயார்க்: இரட்டைத் தலை உள்ள அரிய வகை பாம்பு அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


அமெரிக்கா, ஆப்ரிக்கா உள்ளிட்ட நாடுகளில் ரேட்டில் ஸ்நேக் எனப்படும் கட்டுவிரியன் வகை  பாம்புகள் அதிகளவில் காணப்படுகின்றன. இந்நிலையில், அமெரிக்காவின் நியூ ஜெர்ஸி பகுதியில் உள்ள அடர் வனப்பகுதியில் இருந்து புதிய வகை ரேட்டில் ஸ்நேக் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அது பேபி டிம்பர் ரேட்டில் ஸ்நேக் வகையை சேர்ந்ததாக உள்ளது. இதைவிட முக்கியமாக, இரண்டு தலையுடன் அந்த பாம்பு உள்ளதைப் பார்த்து வன உயிரின ஆராய்ச்சியாளர்கள் வியப்படைந்துள்ளனர். இதையடுத்து, அப்பாம்பிற்கு, #DoubleDave என, ஆராய்ச்சியாளர்கள் பெயரிட்டுள்ளனர்.  

8 முதல் 10 இன்ச் நீளம் உள்ள விஷப்பாம்பான டபுள் தேவ், முழுதாக நன்கு வளர்ந்த இரட்டைத் தலை, நான்கு கண்கள், 2 நாக்கு உள்ளிட்டவற்றுடன் காணப்படுகிறது. இரட்டை தலையுடன் அந்த பாம்பு எவ்வித சிக்கலும் இன்றி இயல்பாக இயங்குவது வன உயிரின ஆராய்ச்சியாளர்களை மேலும் வியப்படைய செய்துள்ளது.

எனினும், இரட்டைத் தலை அதேசமயம் ஒரே குடல் அமைப்பு இருப்பதால், உணவு உண்கிறபோது, சிக்கல் ஏற்படும் எனக் கூறும் ஆராய்ச்சியாளர்கள், இதுபற்றி மேலும் விரிவான ஆய்வு நடத்தி வருவதாகவும் குறிப்பிடுகின்றனர்...