சார் அது சாரைப் பாம்பு..! பிடித்த உடன் கைகளில் சுழன்று சுற்றி சீற்றம்..! ஆனாலும் உயிரை பணயம் வைத்து பிடித்த தீயணைப்பு வீரர்..! ஏன் தெரியுமா?

நீலகிரி மாவட்டத்தில் ஏடிஎம் ஒன்றில் இருந்த பாம்பை மீட்பதற்காக சென்ற தீயணைப்பு வீரனின் கையில் அந்த பாம்பு சுழன்று கொண்டு சீரய சம்பவம் அங்கு இருந்தவர்களை சற்றுநேரம் நடுநடுங்க வைத்துள்ளது .


கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பயந்து மனிதர்கள் அனைவரும் தங்களுடைய வீடுகளிலேயே முடங்கி இருக்கும் நிலையில் விலங்குகள் அனைத்தும் சுதந்திரமாக சாலைகளில் நடமாடிக் கொண்டிருக்கின்றன. சமீப காலமாகவே சாலைகளில் மான் குட்டிகள், பாம்புகள் என பல உயிரினங்கள் நடமாடுவது பற்றிய தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில் தற்போது நீலகிரி மாவட்டத்தில் அமைந்திருக்கும் ஏடிஎம்மில் பாம்பு ஒன்று பதுங்கி இருந்ததைப் பார்த்த பணம் எடுக்க வந்த நபர் அலறி அடித்து ஓடி உள்ளார்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூரில் சிம்ஸ் பார்க் என்ற இடம் அமைந்துள்ளது. இங்கு கனரா வங்கிக்கு உரிமையான ஏடிஎம் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஏடிஎம் வாசலின் கதவுகள் உடைந்த நிலையில் காணப்பட்டுள்ளன. இந்த உடைந்த துவாரத்தின் வழியாக பாம்பு ஒன்று ஏடிஎம்மிற்குள் நுழைந்துள்ளது. அதே நேரத்தில் ஏடிஎம்மில் பணம் எடுக்க வந்த வாடிக்கையாளர் ஒருவர் உள்ளே பாம்பு படுத்திருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர் அங்கிருந்து பதறியடித்துக் கொண்டு ஓடிய அவர் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கும் வனத்துறையினருக்கு தகவல் அளித்து இருக்கிறார்.

தகவல் அறிந்த அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். அந்த பாம்பை மீட்பதற்காக சென்ற வீரர் கைகளில் சாக்குப் பையுடன் தயாராக இருந்துள்ளார். அந்நேரத்தில் மீட்கப்பட்ட அந்த பாம்பு வீரரின் கைகளின் மணிக்கட்டில் சுற்றிக் கொண்டு அவரின் உயிரைப் பரிக்க பார்த்தது. இதனைப் பார்த்த அந்த வீரர் திக்குமுக்காடி காணப்பட்டார். பின்னர் நீண்ட நேர போராட்டத்திற்கு பின்னர் அந்த வீரர் பாம்பை மீட்டு அருகில் இருந்த சரவணமலை மலைப்பகுதியில் கொண்டு சேர்த்துள்ளனர்.