பீர் பாட்டிலுக்குள் புகுந்து மடக் மடக்..! வைரலாகும் குடிகார பாம்பு வீடியோ!

காட்டுக்குள் வீசப்பட்ட பீர் கேனுக்குள் ராஜநாகம் சிக்கிக்கொண்ட சம்பவம் ஓடிசாவில் நிகழ்ந்துள்ளது.


ஒடிசா மாநிலத்தில் உள்ள மயூர்கஞ்ச் மாவட்டத்திற்கு உட்பட்ட காட்டில் பொதுமக்கள் அவ்வப்போது மது அருந்திவிட்டு அங்கேயே கேன்கள் மற்றும் பாட்டில்களை வீசி செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். அப்படி வீசி சென்ற பீர் கேனில் அவ்வழியாக சென்ற பாம்பு ஒன்று சிக்கிக்கொண்டு வெளியே வரமுடியால் மாட்டியது. 

இதனை கண்ட ஊர் மக்கள், ராஜநாகம் போல இருந்ததால், கொடிய விஷம் இருக்கும் என நினைத்து உடனடியாக வனதுறையினருக்கு தகவல் அனுப்பினர்.

சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், நாகத்தை மீட்டு விலங்கியல் பூங்காவிற்கு அனுப்பி வைத்தனர்.