படுக்கையறை கட்டிலில் உல்லாசமாக இருந்த பாம்புகள்! தெரியாமல் மேலே அமர்ந்த பெண்ணுக்கு ஏற்பட்ட கொடூரம்!

இனப்பெருக்கம் செய்து கொண்டிருந்த ஜோடி பாம்பின் மீது கவனிக்காமல் அமர்ந்த பெண்ணிற்கு நேர்ந்த சோகம் குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


உத்தரபிரதேசத்தில் உள்ள கோரக்பூர் மாவட்டத்தில் வசித்து வந்த கீதா எனும் பெண்ணிற்கு வெளிநாட்டில் வேலை பார்க்கும் கணவர் உள்ளார். இந்நிலையில், கணவர் வெளிநாட்டில் இருப்பதால் அவருடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசிக் கொண்டிருந்த கீதா தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என கவனிக்காமல் நேராக படுக்கை அறைக்கு சென்று அமர்ந்துள்ளார்.

அப்போது படுக்கையின் மீது இரு பாம்புகள் இனப்பெருக்கத்திற்காக நெளிந்து கொண்டிருந்தன. அத்தருணத்தில் கீதா தவறுதலாக அமர்ந்ததால் இரண்டு பாம்புகளும் கீதாவை சரமாரியாக கடித்தன. கீதாவின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்த அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து பார்க்கையில் கீதா பாம்புகள் கடித்து மயக்க நிலையில் இருந்தார்.

அதன் பிறகு உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி உயிர் இழந்த சம்பவம் குடும்பத்தினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் அக்கம் பக்கத்தினர் உடனடியாக பாம்பு இருக்கும் இடத்தை கண்டறிந்து இரண்டு பாம்பையும்  அடித்துக் கொன்று விட்டனர்.