பாம்புக்கு விபரீத சவால்! இளைஞருக்கு நொடியில் ஏற்பட்ட பயங்கரம்! வைரல் வீடியோ!

சென்னை: பாம்பை கையில் பிடித்தபடி சவால் விட்ட நபர் தாறு மாறாகக் கடி வாங்கிய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.


இந்த வீடியோ Reptile Hunters என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் செப்டம்பர் 19ம் தேதியன்று  வெளியிடப்பட்டுள்ளது. இதுவரையிலும் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த வீடியோவை பார்வையிட்டுள்ளனர்.

இதில் ஒரு இளைஞர் சீறும் பாம்பை கையில் பிடித்துக் கொண்டுள்ளார். அந்த பாம்பு சீறுவதைப் போல அவரும் வாயில் காற்றை அடைத்து ஊதி ஊதி அதனை மேலும் வெறியேற்றுகிறார்.

பிறகு தனது தலைக்கு மேலே அதன் வாயை கொண்டு செல்கிறார். அப்போது திடீரென பாம்பு அவரது தலைமுடியையும், தலையையும் சேர்த்து கெட்டியாக கவ்விக் கொள்கிறது. இதில் இருந்து விடுவிக்க முடியாமல் அந்த நபர் போராடுகிறார். அதற்குள் வீடியோ காட்சி முடிவடைகிறது.  

எனினும், இதில் இருப்பவர் யார், எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை. இதுபோன்ற சம்பவம் விலங்குகளை வதைக்கும் செயல் என்பதால் ,இதுபற்றி விசாரித்து சம்பந்தப்பட்டவரை தண்டிக்க வேண்டும் என, விலங்குகள் நல ஆர்வலர்கள் குறிப்பிடுகின்றனர்.