நாடாளுமன்ற புதிய சபாநாயகர்! ஸ்மிருதி இரானிக்கு அடித்தது யோகம்!

நாடாளுமன்றத்தின் புதிய சபாநாயகராக ஸ்மிருதி இரானி நியமிக்கப்படுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.


கடந்த நாடாளுமன்றத்தின் சபாநாயகராக சுமித்ரா மகாஜன் செயல்பட்டார். இந்த முறை அவருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் அவர் மீண்டும் சபாநாயகராக முடியாத சூழல் நிலவுகிறது. எனவே புதிய சபாநாயகரை பாஜக தேர்வு செய்ய வேண்டும்.

கடந்த 10 ஆண்டுகளாகவே நாடாளுமன்றத்தின் சபாநாயகராக பெண்களே இருந்துள்ளனர். 2009 முதல் 2014 வரை காங்கிரஸ் கட்சியின் மீராகுமார் சபாநாயகராக இருந்தார். 2014 முதல் 2019 முறை பாஜகவின் சுமித்ரா மகாஜன் சபாநாயகராக செயல்பட்டார். அந்த வகையில் இந்த முறையும் பெண் ஒருவருக்கு சபாநாயகர் பதவியை கொடுக்க பாஜக முடிவெடுத்துள்ளது.

அதன்படி அமேதி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை வீழ்த்திய ஸ்மிருதி இராணியை கவுரவிக்கும் வகையில் அவருக்கு நாடாளுமன்றத்தில் மிக உயரிய சபாநாயகர் பொறுப்பை கொடுக்க பாஜக முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான முறையான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் ஸ்மிருதி இரானி வெளியுறவுத்துறை அமைச்சராக நியமிக்கப்படும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.