வீட்டில் உல்லாசமாக இருந்த கணவன் மனைவி! இணையத்தில் நேரலையாக ஒளிபரப்பான விபரீதம்! காரணம் ஸ்மார்ட் டிவி?

தொழிலதிபர் ஒருவர் மனைவியுடன் தனிமையில் இருந்ததை ஸ்மார்ட் டிவி வீடியோ பதிவு செய்த சம்பவம் சூரத்தில் நடந்துள்ளது.


சூரத்தை சேர்ந்த ராஜேஷ் என்பவர் தனது வீட்டில் ஸ்மார்ட் டிவி ஒன்றை வாங்கி வைத்தார். அந்த ஸ்மார்ட் டிவி யில் வைஃபை வசதியை ஏற்படுத்திய அவர் வீட்டில் மனைவி இல்லாத வேளையில் ஆபாச படங்கள் பார்ப்பதை வாடிக்கையாக வைத்திருந்தார். அப்படி ஒரு முறை வழக்கம்போல் ஆபாசப் படத்தைப் பார்த்தபோது அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது ‌.

காரணம் ஆபாச இணையதளம் ஒன்றில் தனது மனைவியுடன் தாம் தனிமை பகிர்ந்து கொண்ட காட்சிகள் அதில் இடம்பெற்றிருந்தது தான். இதனால் அதிர்ச்சியில் உறைந்து போன ராஜேஷ் போலீசில் கூறினால் தமது பெயர் கெட்டுப் போய்விடும் என்ற காரணத்தினால் தமக்கு தெரிந்த சைபர் பாதுகாப்பு நிபுணர்களை அணுகி ஆலோசனை கேட்டார்.

வீட்டிற்கு வந்து ஆய்வு செய்த அந்த நிபுணர்கள் எப்படி இவர்களது வீடியோ ஆபாச இணையதளத்திற்கு சென்றது என்பது குறித்து தீவிரமாக சோதனை போட்டனர். இருப்பினும் எதுவும் சிக்கவில்லை. அப்போது அவரது பார்வை வீட்டுச் சுவரில் மாட்டப்பட்டிருந்த ஸ்மார்ட் டிவி யின் பக்கம் விழுந்தது. இருப்பினும் ஸ்மார்ட் டிவியாள் எப்படி வீடியோவை பதிவு செய்ய முடியும் என்ற கேள்வி எழுந்தது. அந்தக் கேள்விக்கு பதில் மிகவும் எளிதான ஒன்றுதான்.

அதுதான் ஹேக்கிங். ராஜேஷ் ஆபாச இணைய தளத்துக்குள் செல்லும் போதே, ஹேக்கர் ஒருவர் ராஜேஷின் டிவியை ஆப் செய்து விட்டார். அது வைபை வசதி கொண்ட டிவி என்பதால் கேமரா வசதியை இணையதளத்திலேயே நிறுவி அதன் மூலமாக அந்தரங்க வீடியோவை பதிவு செய்து தளத்தில் பதிவேற்றி இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் உதவியுடன் தனது மனைவியுடன் இருந்த அந்தரங்க வீடியோவை ராஜேஷ் நீக்கியுள்ளார். இருந்தபோதிலும் இந்த சம்பவமானது தொழில்நுட்பத்தின் அபரிமிதமான வளர்ச்சியை கேள்விக்குள்ளாக்கியுள்ளது.