மின் கம்பத்தில் மோதி சிதைந்த ஃபோர்டு ஈகோ ஸ்போர்ட் கார்! ஏர் பேக்கால் ஏற்பட்ட விபரீதம்! கோமாவுக்கு சென்ற டாக்டர்! மனைவி வெளியிட்ட பகீர் தகவல்!

அதிக விலை கொடுத்து கார் வாங்கினால் பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்திருக்கும் என வாடிக்கையாளர்கள் நம்பும் நிலையில் அந்த நம்பிகைக்கு சில கார் நிறுவனங்கள் பாத்திரமாக இருப்பது இல்லை என்ற குற்றசாட்டு எழுந்துள்ளது.


கர்நாடகமாநிலம் மைசூரை சேர்ந்த மருத்துவர் கங்காதர் என்பவரின் மனைவி பேஸ்புக்கில் போர்டு எக்கோ ஸ்போர்ட் காரில் பாதுகாப்பு அம்சங்கள் இல்லை என பதிவிட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

அதாவது தன்னுடைய கணவர் ரூ.12 லட்சம் மதிப்புள்ள ஃபோர்டு எகோ ஸ்போர்ட் கார் வாங்கினார். 5 மாதங்களுக்கு முன்ன அவர் தேசிய நெடுஞ்சாலையில் காரை ஓட்டிக் கொண்டு சென்றபோது எதிர்பாராத விதமாக விபத்த நேர்ந்தது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த கணவர் கோமா நிலைக்கு சென்று மருத்துவமனையில் உள்ளார்.

மேலும் கார் விபத்தில் சிக்கியிருந்தாலும் அவர் காயம் அடைந்ததற்கு காரில் இருந்த ஏர்பேக் விரிவடையாததே என குற்றம் சாட்டியுள்ளார். இதுபற்றி சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் கேட்டும் இதுவரை முறையான பதில் கிடைக்கவில்லை என்றும் சமூக வலைதளங்கவில் பதிவிட்டால் அந்த நிறுவனத்தின் தலைமையின் கவனத்திற்கு செல்ல வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இதேபோல் குஜராத் மாநிலத்தை சேர்ந்த தொழிலதிபர் மிஹிர் பன்ச்சால் ரூ.40 லட்சம் மதிப்பு ஃபோர்டு என்டேவர் கார் ஒன்றை வாங்கி இருந்தார். இந்த காரில் கடந்த மாதம் பயணம் செய்தபோது காரின் இன்ஜினில் திடீரென தீப்பற்றியது. இதை கவனித்த மிஹிர் பன்ச்சால் காரை விட்டு கீழே இறங்க முயற்சித்தபோது அவரால் சீட் பெல்ட்டை கழற்ற முடியவில்லை.

சீட் பெல்ட் ஜாம் ஆகி விட்டது. இதனால் காரை விட்டு வெளியில் வரமுடியாமல் தீக்கிரையாகினார் மிஹிர் பன்ச்சால். இதேபோல டாக்டர் சரனா ரெட்டி என்பவருக்கு சொந்தமான ஃபோர்டு என்டேவர் கார், கடந்த ஏப்ரல் மாதம் திடீரென தீப்பற்றி எரிந்தது.

தற்போதைய விலை உயர்ந்த மாடர்ன் கார்களில் உள்ள ஏர் பேக், ஏபிஎஸ் உள்ளிட்ட அதிநவீன பாதுகாப்பு அம்சங்கள் கூட சில சமயங்களில் போதிய பாதுகாப்பை வழங்குவது இல்லை என்று மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.