ஜூனியர் விகடன் மீது பாயும் சிறு பத்திரிகைகள். பெய்டு நீயூஸ் என பணம் வாங்கும் ஜூ.வி. இப்படி பாயலாமா?

சமீபத்தில் ஜூனியர் விகடன் இதழில், போலி பத்திரிகைகள் என்று 51 நாளிதழ்களின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளது.


அந்த பத்திரிகைகளுக்கு எப்படி அரசு அங்கீகார செய்தியாளர் அட்டை கொடுக்கப்பட்டது என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் ஜூனியர் விகடனுக்கு கண்டனம் தெரிவிக்கிறார் காகிதம் ராஜன். ஜூவியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள 51 பத்திரிகைகளும் முறையாக வந்து கொண்டுதான் உள்ளன. விளம்பர வருமானத்தை மட்டுமே வருமானமாகக் கொண்டு குறுகிய வட்டத்துக்குள் வருகின்ற பத்திரிகைகள்தான் இவைகள்

உங்கள் கண்ணில் இப்பத்திரிகைகள் தென்பட்டாதற்கு காரணம் இவைகள் பரவலாக விற்பனையாகும் பத்திரிகைகள் அல்ல, இவைகள் சிற்றிதழ்கள் அதன் சக்தி வளர்ச்சி அவ்வளவுதான்,இன்று முன்னணியில் உள்ள பல பத்திரிகைகளு ஒருகாலத்தில் சிற்றிதழ்களாக வந்தவைகள் தான்,முரசொலி பல காலமாக கையெழுத்து பிரதியாகத்தான் வந்தது என்பதை நினைவூட்டுகிறோம்.

ஜூவி கூறிய குற்றச்சாட்டில் அரசு அங்கீகார அட்டையை முறைகேடாக பயன்படுத்துபவர்கள் சிற்றிதழ்களில் முற்றிலும் இல்லையென நானோ எம் காகிதம் இயக்கமோ கூறவில்லை.அதே நேரத்தில் பெரிய பத்திரிகைகளில் அத்தகையவர்கள் இல்லையென ஜூ,வியும் கூறு முடியாது. தவறு செய்ய முற்படுபவனுக்கு பெரிய பத்திரிகை,சிற்றிதழ் என பாகுபாடெல்லாம் கிடையாது.அதை அவன் எங்கிருந்தாலும் செய்வான்

இன்று பெரிய பத்திரிகைகளின் செய்தியாளர்கள் செய்திக்கு பணம் வாங்கினால் அதற்கு பெயர் கவர். அதையே செய்திக்கு என்று முதலாளி பணம் வாங்கினால் அதற்கு பெயர் பெய்டு நியூஸ். முன்பெல்லாம் பத்திரிகையில் எத்தனை பக்கம் செய்தி என ஆசிரியர் குழு முடிவு செய்த பின் மீதமுள்ள இடத்தில் விளம்பரத்தை பிரசுரிப்பார்கள். செய்திக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள்.

இப்போது பத்திரிகையின் விளம்பர பிரிவு தான் பக்கங்களை முடிவு செய்கிறது,விளம்பரமும் பெய்டு நியூஸும் பக்கத்தை நிரப்பிய பின் மீதமுள்ள இடத்தில் தான் ஆசிரியர் குழு செய்தியை கொடுக்க முடியும். எல்லாம் பணம் என்பதுதான் பெரிய பத்திரிகைகளின் நிலைமை தமிழக செய்தித்துறை தகவல் உரிமை சட்டத்தில் கொடுக்கப்பட்ட தகவலில் 51 பத்திரிகைகளை மட்டும் பாக்ஸ் செய்தியில் பெயர்களோடும். அவர்கள் பெற்ற செய்தியாளர் அட்டை எண்ணிக்கையும் சுட்டிக்காட்டியுள்ளீர்களே இப்பத்திரிகையைகளை மட்டும் குறி வைப்பது ஏன்!?

உங்கள் பெட்டிச்செய்தியில் உள்ள கணக்குப்படி 2019 -ஆம் ஆண்டு வழங்கஅட்டுள்ள 905 அரசு அங்கீகார செய்தியாளர் அட்டையில் 51 பத்திரிகைகள் பெற்ற 175 அட்டைகள் தவிர 730 அ.அ.செ.அட்டைகள் பெற்ற பத்திரிகைகளின் பெயரையும்,அவர்கள் பெற்ற அ.அ.செ.அட்டைகளின் எண்ணிக்கையும் வெளியிடாதது ஏன்? அச்சு ஊடகத்தை மட்டும் குறிப்பிட்டு எழுதியுள்ள ஜூ.வி.காட்சி ஊடகத்தை பற்றி குறிப்பிடாதது ஏன் என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.