கைகளும் வளரவில்லை..! கால்களுக்கும் வளர்ச்சி இல்லை..! குள்ளமாக இருந்தாலும் நெகிழ வைக்கும் மாற்றுத் திறனாளி! வைரல் வீடியோ உள்ளே!

மாற்றுத்திறனாளி ஒருவர் கானா பாடலுக்கு சூப்பராக டேன்ஸ் ஆடும் டிக் டாக் வீடியோ காட்சி தற்போது வைரலாகி வருகிறது.


டிக் டாக் செயலை பயன்படுத்துபவர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்கு தெரிந்த பாடல், ஆடல், சண்டை என திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். இதற்கு மாற்றுத் திறனாளிகளும் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் ஒருவர் தனக்கு தெரிந்த கானா பாடலுக்கு உட்கார்ந்தவாரே நடனம் ஆடி அனைவரையும் கவர்ந்துள்ளார்.

இந்த பாடல் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாக பல்லாயிரக்கணக்கானோர் லைக் செய்து வருகின்றனர். அவர் எந்த ஊரை சேர்ந்தவர் என தெரியல்லை. அவருக்கு தமிழ் தெரிந்து ஆடுகிறாரா அல்லது வேறு மாநிலத்தை சேர்ந்தவரா என தெரியவில்லை. இந்த நடனம் தற்போது பிலிமிபீடியா என்ற டிவிட்டர் பக்கத்தில் வெளியாகி உள்ளது.

"பழுத்து வச்சிருக்கும் பழம் பள பளன்னு" என்ற கானா பாடலுக்கு தன்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு ஆடி மகிழ்வித்திருக்கிறார் அந்த மாற்றுத் திறனாளி இளைஞர். நன்றாக உடல் அமைப்பு கொண்டவர்களே டேன்ஸ் ஆடுவதற்கு சோம்பேறித்தனம் படும் வகையில் இவருடைய ஆட்டம் அனைவரையும் ரசிக்க வைத்துள்ளது.