இளைஞரை கொடூரமாக சுட்டுக் கொன்ற பெண் போலீசை கோர்ட்டில் கட்டி அணைத்து மன்னித்த சகோதரன்! நெகிழ வைக்கும் சம்பவம்!

அமெரிக்காவில் அண்ணனை கொலை செய்த பெண் காவலரை தம்பி மன்னித்த நெகிழ்ச்சிகரமான சம்பவம் நீதிமன்றத்தில் நடந்துள்ளது


அமெரிக்காவின் டல்லாஸ் மாகாணத்தில் பெண் காவலர் ஆம்பர் கைகெர் வசித்து வந்தார். 2018 செப்டம்பர் மாதம், தனது வீட்டின் அருகே வசித்து வந்த கருப்பினத்தை சேர்ந்த போதம் ஜீன் என்ற இளைஞரை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தார். இந்த சம்பவம் கருப்பினத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் என அந்நாட்டில் போராட்டம் வெடித்தது. ஆனால் இதை மறுத்த அந்த பெண் காவலர் தனது வீட்டுக்குள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதால் தற்காப்புக்காக ஜீனை கொலை செய்ததாக கூறினார். 

இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. இதில் பெண் காவலடிர் ஆம்பர் மீதான குற்றச்சாட்டு உறுதியானதை அடுத்து குற்றவாளியான பெண் காவலர் ஆம்பருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி டல்லாஸ் நீதிமன்றம் தீர்ப்பு எழுதியது.  

இதனிடையே ஆம்பரால் கொல்லப்பட்ட ஜீன் குடும்பம் சார்பில் நீதிமன்றம் வந்த அவரது தம்பி, தம்பியை கொன்ற ஆம்பரை தான் மன்னித்து விட்டதாகவும், அவரை அரவணைத்து ஆறுதல் கூற நீதிமன்றம் அனுமதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார். இதற்கு நீதிபதியின் அனுமதி கிடைத்ததை அடுத்து, இருவரும் நீதிமன்றத்தில் ஆரத்தழுவிக் கொண்டனர்.

நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற இந்த நெகிழ்ச்சி சம்பவம், ஜீனின் குடும்பத்தினரையும் கண்கலங்க வைத்தது. முன்னதாக ஆம்பரின் சிறை தண்டனை 10 ஆண்டுகளாக குறைக்கப்பட்டதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றம் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.