சாலையில் கிடந்த கரண்ட் வயர்! தெரியாமல் கால் வைத்த சிறுவன்! அதிகாரிகள் அலட்சியத்தால் நேர்ந்த விபரீதம்! பதைபதைக்க வைத்த சம்பவம்!

சென்னை போரூர் அருகே உள்ள பகுதியில் மின்வாரியத் துறை அதிகாரிகளின் அலட்சியத்தால் மின்சாரம் தாக்கி ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சென்னை போரூர் அருகே உள்ள முகலிவாக்கம் பகுதியில் வசித்து வரும் செந்தில் - வனிதா தம்பதியினருக்கு இரு மகன்கள் உள்ளனர். அதில் மூத்த மகன் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளார். செந்தில் ஷேர் ஆட்டோ ஓட்டி தன் குடும்பத்தை நடத்தி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

செந்தில் வசித்துவரும் பகுதி அருகே அண்மையில் பள்ளம் தோண்டப்பட்டு மின்சார வயர்கள் பதிக்கப்பட்டது. அதன்பிறகு மின்வாரியத் துறை அதிகாரிகள் அதனை உரிய முறையில் மூடாமல் அங்குமிங்கும் வயர்கள் வெளியே தெரியும்படி வைத்து விட்டு சென்றனர். 

இதுகுறித்து பொதுமக்கள் பலர் ஆபத்து நேரிடும் என தொடர்ந்து புகார் அளித்து வந்த நிலையில், அதற்காக அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியப் போக்கில் விட்டுள்ளனர். வழி முழுவதும் பள்ளம் மேடுகள் ஆக இருந்ததால் நேற்று பெய்த மழையில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி கொண்டிருந்தது. 

இந்நிலையில் செந்திலின் இருசக்கர வாகனத்திற்கு அவரது மூத்த மகன் தீனா எரிவாயு நிரப்புவதற்காக அவ்வழியாக தள்ளி சென்று கொண்டிருந்தார். அப்போது தண்ணீர் தேங்கியிருந்த பகுதியில் வயர்கள் மேலே இருந்த வண்ணம் இருந்ததால் அதில் மின்சாரம் பாய்ந்து கொண்டு இருந்தது. தவறுதலாக வயர் மீது தீனா கால் வைக்கவே, அதே இடத்தில் மின்சாரம் தாக்கி மயங்கிய நிலையில் விழுந்துள்ளார்.

பொதுமக்கள் உடனடியாக மின்சாரம் பாய்வதை துண்டித்துவிட்டு தீணாவை மீட்டு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். ஆனால், தீனா அப்போதே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவிக்க பிரேத பரிசோதனைக்கு கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பப்பட இருந்தது. 

தீனாவின் உடலை வாங்க மறுத்து குடும்பத்தினர் போரூர் கிண்டி சாலையில் தர்ணாவில் ஈடுபட்டனர் பின்னர் போலீசார் இச்சம்பவத்திற்குள் வந்து பொதுமக்களை சமாதானப்படுத்தி களையை செய்தனர். 

இது குறித்து பேசிய பொதுமக்களில் சிலர், பலமுறை புகார் அளித்தும் மின்வாரிய துறையின் அலட்சியத்தால் ஒரு உயிர் பறிபோயுள்ளது. இதற்கு காரணமாக இருந்த அதிகாரிகளை நிச்சயம் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்