இயக்குனர் அமீருக்கு செருப்பு மாலை! கொந்தளிக்கும் எம்.ஜி.ஆர். பக்தர்கள்! ஏன் தெரியுமா?

சினிமா எடுத்து பெயர் வாங்குகிறாரோ இல்லையோ, எதையாவது பேசி சலசலப்பைக் கிளப்புவது அமீர் வழக்கம். அந்த வகையில் சமீபத்தில் சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு எம்.ஜி.ஆர். பெயர் வைத்ததை கிண்டல் செய்தார் அமீர்.


வடிவேலு ஒரு படத்தில் அக்காவைக் கொடுத்து பேக்கரியை எழுதி வாங்குவார். அதுபோல, தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆர். பெயரை ரயில்வே ஸ்டேஷனுக்கு வைப்பதற்காக, கட்சியைத் தூக்கிக் கொடுத்துவிட்டார்கள். எம்.ஜி.ஆருக்கு இப்படி ஒரு அவமானம் தேவையா என்ற ரீதியில் ஆட்சியாளர்களை திட்டுவதாக நினைத்து எம்.ஜி.ஆரையும் திட்டித் தீர்த்துவிட்டார்.

இதைக் கேட்டு டென்ஷனாகியிருக்கும் எம்.ஜி.ஆர். பக்தர்கள் ஒன்றுசேர்ந்து அமீருக்கு எதிராக போராட்டம் நடத்தி செருப்பு மாலை போடுவதற்கு தயாராகி வருகிறார்கள். தமிழ்நாட்டில் அப்பழுக்கற்ற அரசியல்வாதியாகத் திகழ்ந்த எம்.ஜி.ஆரைப் பற்றி பேசுவதற்கு அமீருக்கு என்ன அருகதை இருக்கிறது என்று கொந்தளிக்கிறார்கள்.

செருப்பு மாலை போடாமல் ஓயமாட்டோம் என்று ஒன்று சேர்ந்திருக்கும் பெரிசுகள் எண்ணிக்கை குறைவு என்றாலும் வீராவேசமாகப் பேசுகிறார்கள். பார்க்கலாம், சொன்னதை செய்வார்களா என்று.