பிறந்த குழந்தையின் தோல்

சினிமாவிலும் விளம்பரப் படங்களிலும் வரும் குட்டிக்குழந்தைகள், கண்ணாடி போல் பளிச்சென்று அழகாக இருப்பதுண்டு. ஆனால் பொதுவாக பெரும்பாலான குழந்தைக்கு பிறக்கும்போது தோலில் பல்வேறு பிரச்னைகள் இருப்பதுண்டு.


·         பிறக்கும்போது குழந்தையின் தலையில் உள்ள தோல், உரியும் நிலையில் திட்டுத்திட்டாக இருப்பதுண்டு. மருத்துவர் தரும் களிம்பை பூசினால் எளிதில் இந்த பிரச்னை மறைந்துவிடும்.

·         தோலில் வெள்ளை அல்லது சிவப்பு நிறத்தில் கொப்புளங்கள்  இருப்பதுண்டு. இவை விரைவில் உலர்ந்து விழுந்துவிடும் என்பதால் சிகிச்சை தேவைப்படாது.

·         குழந்தைகளுக்கு சிவப்பு நிறத்தில் பெரிய மருக்கள் இருப்பதுண்டு, இவையும் விழுந்துவிடும் வாய்ப்பு உண்டு.

·         தோலில் வெண் புள்ளிகள், சிவப்பு புள்ளிகள், மஞ்சள் புள்ளிகள் தென்படலாம். இந்த பிரச்னைகளும் தானாகவே சரியாகிவிடும்.


அதனால் இதுபோன்ற அறிகுறிகளைக் கண்டு குழந்தைக்கு ஏதோ பெரிய நோய் என்று பயப்படத் தேவையில்லை. ஒருசில வாரங்களில் குழந்தையின் தோல் பிரச்னைகள் தீர்ந்து பளபளப்பாகிவிடும்.