நெற்றியில் வந்த சின்ன பரு..! கண்டு கொள்ளாத இளம் பெண்ணுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி..! பின்னர் டாக்டர்களால் ஏற்பட்ட கதி!

லண்டன்: பெண் ஒருவரின் நெற்றியில் தோன்றிய கரும்புள்ளி நாளுக்கு நாள் வளர்ந்து, தோல் புற்றுநோயாக மாறியுள்ளது.


பிரிட்டனின் மான்செஸ்டர் பகுதியை சேர்ந்தவர் கேட்டி ஃபிளின். 31 வயதான இவருக்கு, நெற்றியில் கரும்புள்ளிகள் வந்திருக்கின்றன. ஆனாலும், இவை சாதாரணமான ஒன்றுதான் என அவர் கணடுகொள்ளாமல் விட்டிருக்கிறார். எனினும், நாளுக்கு நாள் கரும்புள்ளிகளின் தொல்லை அதிகரிக்கவே, தோல் சிகிச்சை நிபுணரிடம் சென்று பரிசோதித்துள்ளார்.

அவர்கள் ஒருவித களிம்பு கொடுத்து தடவ கூறியிருக்கின்றனர். களிரம்பு தடவியபோது கரும்புள்ளிகள் மறைவதற்குப் பதிலாக, இன்னும் அதிகமாக வளர்ந்து, மூக்கு வரை சென்றுவிட்டன. மேலும், ரத்தம் கலந்த நிறத்தில் மிகவும் அகோரமாக முகம் மாறவே, உடனடியாக மருத்துவ உதவியை கேட்டி நாடியுள்ளார்.

அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு தோல் புற்றுநோய் வந்ததை உறுதி செய்தனர். இதன்பேரில் உடனடியாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, அவரது புற்றுநோய் கட்டி அகற்றப்பட்டுள்ளது. இதனால், மூக்கு மற்றும் நெற்றியின் ஒரு குறிப்பிட்ட சதைப்பகுதியை அவர் இழந்துவிட்டார்.  

மேலும், குறிப்பிட்ட சிகிச்சை காரணமாக மூக்கு, நெற்றி மேலே ஒருவித தழும்பு ஏற்பட்டுவிட்டது. தற்போதைக்கு நிலைமை பரவாயில்லை என்றாலும், மூக்கு பகுதியில் மீண்டும் புற்றுநோய் ஏற்படலாம் என்ற சூழலில் தனது குடும்பத்தினருக்கு தெரியாமல் ரகசியமாக இந்த சிகிச்சைக்கான மருத்துவத்தை தொடர்ந்து வருவதாக, கேட்டி ஃபிளின் தெரிவித்துள்ளார்.  

கேட்டிக்கு 2 குழந்தைகள் உள்ளன, அத்துடன் தற்போதுதான் அவரது காதலன் திருமணம் செய்ய ஒப்புக் கொண்டுள்ளார். இந்த நிலையில் தோல் புற்றுநோய் ஏற்பட்டுள்ளது மன வேதனையாக உள்ளதென்று கேட்டி குறிப்பிடுகிறார்.