சிவகாசி அருகே திருமணமாகி 14 ஆண்டுகள் ஆன நிலையில் குழந்தை இல்லாத விரக்தியில் மனைவியை பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்த கணவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருமணமாகி வருசம் 14 ஆச்சு! இன்னும் குழந்தை பிறக்கவில்லை! மனைவிக்கு கணவனால் நேர்ந்த பயங்கரம்!
சிவகாசி தேவி கிருபா நகரை சேர்ந்தவர் பாண்டி 40, இவரது மனைவி வித்யா 35, பாண்டி அதே பகுதியில் உள்ள ஒரு அச்சகத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு திருமணமாகி 14 ஆண்டுகள் ஆன நிலையில் குழந்தை இல்லை. இந்நிலையில் இதுபற்றி பாண்டியின் தாயார் வித்யாவை பலமுறை திட்டியுள்ளார்.இதையடுத்து கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்கு வாதம் ஏற்பட்டு வந்துள்ளது. வித்யா பலமுறை கோபித்துக்கொண்டு தனது தாய் வீட்டிற்கு சென்று வந்துள்ளார்.
இதையடுத்து இதேபோல் நேற்று இரவு கணவன் மனைவி இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பாண்டி மனைவியை பலமாக தாக்கியுள்ளார். இதையடுத்து சமையலறையில் இருந்த பெட்ரோலை எடுத்து வந்து வித்தியா மீது ஊற்றி நெருப்பு வைத்துள்ளார். இதையடுத்து விஜயாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் உடனே ஓடி வந்து பார்த்த போது வித்தியாவின் உடல் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்ததை பார்த்து உடனே அதிர்ச்சியடைந்தனர்.
இதையடுத்து அவரை காப்பாற்றும் பணியில் அருகில் இருந்தவர்கள் ஈடுபட்டனர்.பாதி எரிந்த நிலையில் வித்தியாவின் உடலை கைப்பற்றி சிவகாசி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நித்யா பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் இதுகுறித்து காவல் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் பாண்டியை கைது செய்துள்ளனர்.
இதையடுத்து அவரிடம் விசாரணை நடத்தியபோது அதில் திருமணமாகி 14 ஆண்டுகள் ஆன நிலையில் குழந்தை இல்லாத விரக்தியில் மனைவி மீது பெட்ரோலை ஊற்றி நெருப்பு வைத்ததாக தெரிவித்துள்ளார். இதையடுத்து பாண்டியை கைது செய்த போலீசார் அவர் மீது கொலைக்குற்ற பிரிவில் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.