சிவகார்த்திகேயன் – நயன்தாரா படத்தின் லேட்டஸ்ட் ஹாட் அப்டேட்!

சிவகார்த்திகேயன் – நயன்தாரா இணைந்து ராஜேஸ் இயக்கத்தில் நடித்து வரும் படம் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது.


அண்மையில் சிவகார்த்திகேயன் – சமந்தா இணைந்து நடித்து வெளியான சீமராஜா திரைப்படம் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் ஆகவில்லை. அதே சமயம் விநியோகஸ்தர்கள் கையையும் கடிக்கவில்லை. இருந்தாலும் கூட வேலைக்காரன் படமும் கூட சிவகார்த்திகேயனுக்கு பெரிய அளவில் கை கொடுக்கவில்லை. ரஜினி முருகன் மாபெரும் ஹிட்டுக்கு பிறகு மற்றொரு மாபெரும் ஹிட்டுக்கு சிவகார்த்திகேயன் காத்திருக்கிறார்.

   சீமராஜா படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த உடனேயே சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தின் இயக்குனரான ராஜேசுடன் இணைவது குறித்து சிவகார்த்திகேயன் அறிவித்தார். அதோது மட்டும் அல்லாமல் வேலைக்காரன் படத்திற்கு பிறகு நயன்தாராவுடன் மீண்டும் சிவகார்த்திகேயன் ஜோடி சேர்ந்துள்ளார். தற்போத வரை பெயரிடப்படாத இந்த படத்தை எஸ்கே 13 என்று அழைக்கிறார்கள். அதாவத சிவகார்த்திகேயனின் 13வது படமாம் இது.

   படப்பிடிப்பு மூன்று மாதங்களுக்கு முன்னர் துவங்கிய நிலையில் மின்னல் வேகத்தில் நடைபெற்று வருகிறது. தற்போது இறுதிகட்ட படப்பிடிப்பு சென்னையில் துவங்கியுள்ளது.ஒரு வாரத்தில் படப்பிடிப்பு முடிந்து விரைவில் படத்தின் பெயர் வெளியிடப்பட உள்ளது.அதன் பிறகு படத்தின் டீசர், டிரெய்லர், சிங்கில் என ஒரு கலக்கு கலக்கி டிசம்பர் மாதம் பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை சமயத்தில் படத்தையே வெளியிட முயற்சி நடைபெறுகிறது.