அரசு மருத்துவமனையில் தற்காலிக பணியாளருக்கு கத்தியால் குத்திக்கொலை. கொலையாளியை பிடித்து போலீசார் விசாரணை.
சிவகங்கை மருத்துவமனையில் பயங்கரம்! தாயின் கள்ளக்காதலனை குத்திக் கொன்ற இளைஞர்! அதிர வைக்கும் காரணம்!

மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தற்காலிக பணியாளராக பணிபுரிந்து வந்தவர் கத்தியால் குத்திக்கொலை. கொலையாளியை பிடித்து போலீசார் விசாரணை.
சிவகங்கை நேரு பஜார் வீதியை சேர்ந்தவர் தமிழ்செல்வன் (40). இவர் சிவகங்கை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தற்காலிகமாக பணியாளராக பணிபுரிந்து வந்துள்ளார்.இன்று
தமிழ்ச்செல்வன் மருத்துவமனையில் பணியில் இருந்த போது, உள்ளே புகுந்த ஒக்கூரை சேர்ந்த அருண் குமார் என்பவர் தமிழ்ச்செல்வனை கத்தியால் குத்தியுள்ளார். இதில் தமிழ்ச்செல்வன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடம் வந்த காவல்துறையினர், அருண்குமாரை பிடித்து காவல் நிலையம் கொண்டு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் சம்பவ இடத்தை நேரில் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டார். அருண்குமாரின் தாய்க்கும் தமிழ் செல்வனுக்கும் இடையிலான தகாத உறவே கொலைக்கு காரணம் என்கிறார்கள்.