அப்பா மகன் மோதல்! சிவகங்கை சீட்டுக்கு ஆசைப்படும் ப.சிதம்பரம்! டென்ஷனில் மகன் கார்த்தி!

சிவகங்கை தொகுதிக்கு மட்டும் வேட்பாளர் யார் என்று அறிவிக்காமல் ராகுல் காந்தி மற்ற ஒன்பது தொகுதிகளுக்கும் வேட்பாளரை அறிவித்துவிட்டார்.


சிவகங்கை தொகுதியில் எப்படியும் கார்த்தியே வேட்பாளர் என்று அனைவரும் உறுதியாக நம்பிக்கொண்டு இருந்தார்கள். கார்த்தி மீது வழக்குகள் நிலுவையில் இருப்பதால், அவரது மனைவி ஸ்ரீநிதி சிதம்பரத்தை வேட்பாளராக நிறுத்தும்படி காங்கிரஸ் மேலிடம் வலியுறுத்தியதாம்.

ஆனால், வேட்பாளராக நானே நிற்க வேண்டும் என்று கார்த்தி அடம் பிடித்து வந்தார். இதில்தான் புதிய டிவிஸ்டாக ப.சிதம்பரம் வேட்பாளராக களம் இறங்க நினைத்ததுதான் சிக்கல் என்று தெரியவந்திருக்கிறது. தற்போது ராஜ்யசபா எம்.பி.யாக இருக்கும் சிதம்பரத்துக்கு இன்னும் கொஞ்ச நாட்கள் பதவி இருக்கிறது என்றாலும், இன்றைய நிலையில் ஜெயித்துஇட்டால், அடுத்த 5 வருடங்களுக்கு பிரச்னை இல்லை என்று நினைக்கிறாராம்.

அதே போன்றுதான் வழக்கு, வம்பு என்று இருக்கும்போது எம்.பி.யாக இருப்பது பாதுகாப்பு என்று கார்த்தி நினைக்கிறார். அப்பாவுக்கும் மகனுக்கும் நடக்கும் மோதலைப் பார்த்து, தொகுதியை கைப்பற்ற சுதர்சன நாச்சியப்பன் முயற்சி செய்கிறார்.

நீங்களே ஒரு முடிவுக்கு வாங்க என்று ராகுல் கை கழுவி விட்டாராம். தேர்தலில் நிற்கவே அடிச்சுக்கிறாங்களே… சூப்பர்ண்ணா