இந்த படிக்கட்டுகளில் உட்கார்ந்தால் ரூ.32 ஆயிரம் அபராதம்! மிரள வைக்கும் காரணம்!

இத்தாலியில் புகழ் பெற்ற சுற்றுலாத் தலமாக விளங்குவது ரோம் நகரில் உள்ள ஸ்பேனிஷ் படிக்கட்டுகள். மிகவும் பழமையான இந்த படிக்கட்டுகளை காண அதிகப்படியான சுற்றுலா பயணிகள் ரோம் நகருக்கு வருகின்றனர்.


இத்தாலி அரசு திடீரென ஒரு புதிய சட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்நிலையில் பழங்கால கட்டிடக் கலைகளைப் பாதுகாப்பதற்காக ஸ்பானிஷ் படிகளில் அமர்ந்தால் அதற்கு அபராதமாக சுமார் 400 யூரோக்கள் விதிக்கப்படும் என அந்த அரசு தெரிவித்துள்ளது. 

இத்தாலியில் உள்ள ரோம் நகரின் மிகவும் முக்கியமான சுற்றுலாத் தலமாக விளங்குவது ஸ்பானிஷ் படிக்கட்டுகள் 1723-1726 காலகட்டங்களில் கட்டப்பட்டதாகவும் மிகவும் புகழ்பெற்ற கட்டிட கலை வல்லுநர்களை வைத்து கட்டப்பட்டது. இதில் சுமார் 175 படிக்கட்டுகள் அமைந்துள்ளன. மேலும் இதன் உச்சியில் ஒரு தேவாலயம் அமைந்துள்ளது இதன் சிறப்பாகும்.

இந்நிலையில் பல்வேறு சுற்றுலா பயணிகள் ரோம் நகரில் உள்ள  படிக்கட்டுகளை காண படையெடுத்து வருகின்றனர். இதையடுத்து பழங்கால பொருட்கள் மற்றும் கட்டிட கடைகளை பாதுகாக்கும் வகையில் இத்தாலி அரசு ஒரு புதிய நடைமுறை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி பழங்கால பொருள்களுக்கு சுற்றுலா பயணிகளினால் ஏதேனும் சேதம் ஏற்பட்டு விடுமோ என நினைத்து ரோம் நகரில் உள்ள படிக்கட்டுகளின் மீது பொதுமக்கள் யாரும் அமரக்கூடாது அங்கு நின்று புகைப்படம் எடுத்துக் கொள்ளக்கூடாது என  தெரிவித்துள்ளது.

அதை மீறி சுற்றுலா பயணிகள் படிக்கட்டுகளில் அமர்ந்தாலோ அங்கு புகைப்படம் எடுத்தாலும் அங்குள்ள காவல்துறையினரால் எச்சரிக்கபடுகின்றனர். அதையும் மீறி அங்கு சட்டத்தை மீறி செயல்படுபவர்களுக்கு சுமார் 400 யூரோக்கள் அபராதமாக விதிக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது. இந்திய ரூபாய் மதிப்பின் படி சுமார் 30,000 வரை அபராதம் வசூலிக்கப்படும் என தெரிகிறது.