அண்ணன் குழந்தையை வயிற்றில் சுமந்து பெற்றெடுத்த தங்கை! நெகிழ வைக்கும் சம்பவம்! அசர வைக்கும் காரணம்!

பிரிட்டிஷில், கும்பிரியா என்னும் பகுதியை சேர்ந்தவர் சேப்பல் கூப்பர். 27 வயதான இப்பெண்மணிக்கு திருமணமாகி ஐந்து வயது பெண் குழந்தை ஒன்று உள்ளது.


இந்நிலையில் கணவனுடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக கணவனைப் பிரிந்து தனது ஐந்து வயது மகளுடன் தனியாக வசித்து வருகிறார். மேலும் சேப்பர் கூப்பருக்கு ஸ்காட் என்ற சகோதரர் உண்டு.

அவரது சகோதரர் தன்பால் ஈர்ப்பு காரணமாக மைக்கேல் என்ற ஆணை துணையாக கொண்டு வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் இருவரும் ஒரு குழந்தையை தத்தெடுக்க வேண்டும் அல்லது வாடகை தாய் மூலம் குழந்தையை பெற்றெடுக்க வேண்டும் என முடிவு செய்தனர்.

ஆனால் இந்த இரண்டு செயல்முறைக்கும் அதிக பணம்  செலவாகும் என்பதால், அதனை அப்படியே கைவிட்டு விட்டனர். இந்நிலையில் சகோதரருக்கு உதவ வேண்டும் என்ற நோக்கில் சேப்பல் கூப்பர் தானே வாடகைத் தாயாக மாற உள்ளதாக தெரிவித்தார்.

அதன்பின் ஸ்காட் மற்றும் மைக்கேல் ஆகியோரின் உதவியுடன் கருவை வயிற்றில் சுமந்து வந்த சேப்பல் கூப்பர் சென்ற வெள்ளிக்கிழமை அன்று குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.

பிறந்த குழந்தைக்கு அவர்கள் அனைவரும் சேர்ந்து ஹார்பர் எலிசபெத் ஸ்மித் என்று பெயர் சூட்டியுள்ளனர். இந்த அனுபவம் குறித்து கூப்பர் கருத்து தெரிவித்துள்ளார். அதில்,

 நான் என் சகோதரனுக்கு உதவியதை எண்ணி சந்தோஷப்படுகிறேன் என்றும், பிறந்த குழந்தை எனக்கு சொந்தமானது என்ற எண்ணம் எனக்கு எப்பொழுது இருக்கும். ஆனால் அவளுக்கு அம்மாவாக ஒரு பொழுதும் இருக்க மாட்டேன் மாறாக அவளுக்குப் பிடித்த அத்தையாக இருக்க விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்.

மேலும் அவரது சகோதரர் ஸ்காட் இதுகுறித்து கூறியதாவது, சேப்பல் கூப்பர் எங்களுக்கு அளித்த பரிசானது மறக்க முடியாத ஒன்று மேலும் அதை வார்த்தைகளால் கூறி விட முடியாது என்று தெரிவித்த அவர், பிறகு ஸ்மித்தின்  பிறப்பு குறித்து கண்டிப்பாக அவளிடம் தெரிவிப்போம் என்றும் உறுதி அளித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து நானும் மைக்கேலும் மட்டுமே ஸ்மித் உடைய சட்டபூர்வமான பெற்றோர்களாக இருப்போம் என்றும் சேப்பல் கூப்பர் உடன் எவ்விதத்திலும் தாய் வழி உறவை தொடர எவ்வித காரணமும் இருக்காது என்றும் குறிப்பிட்டார்.