புதுச்சேரி பயங்கரம்! சிறுமியை காதல் வலையில் வீழ்த்தி! நண்பர்களுக்கு பாலியல் விருந்தாக்கிய கொடூரம்!

புதுச்சேரியில் உள்ள மாட்டுக்காரன் சாவடி பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி, கல்லூரி இரண்டாம் ஆண்டு படித்து வரும் நரேஷ் என்பவரை காதலித்து வந்துள்ளார்.


கடந்த வெள்ளிக்கிழமை இந்த சிறுமியை நரேஷ், விடுதி ஒன்றிற்கு ஆசை வார்த்தைகள் பேசி அழைத்துச் சென்று குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து, சிறுமி மயங்கிய பின்னர் வன்புணர்வு செய்துள்ளார். அதன்பின் அவனது நண்பர்களான ராஜா மற்றும் வெங்கடேஷ் இருவரையும் விடுதிக்கு அழைத்து மூவரும் கூட்டு வன்புணர்வு செய்துள்ளனர்.

இதற்கிடையில், தனது மகளை காணவில்லை என்று நீண்ட நேரமாக தேடிப் பார்த்து, அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். வெள்ளிக்கிழமை இரவு மயக்க நிலையில் தனது மகளை யாரோ இருவர் வீட்டின் அருகில் விட்டுச்செல்வதை கண்ட தாயார், மயக்கம் தெளிந்த சிறுமியை விசாரித்ததில் நடந்த உண்மையை தெரிந்து கொண்டு இந்த மாணவர்களை பற்றி காவல் நிலையத்தில் மீண்டும் ஒரு புகார் அளித்துள்ளார்.

மூவரையும் போலீசார் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர். சிறுமியை காதலித்ததோடு மட்டும் அல்லாமல் காதலியை இரக்கமே இல்லாமல் நண்பர்களுக்கும் விருந்தாக்கிய நரேஷ் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.