நடிகை ரெஜினாவின் வலையில் வீழ்ந்த சூப்பர் ஸ்டாரின் மருமகன்!

சென்னையை சேர்ந்த நடிகை ரெஜினா காதல் வலையில் வீழ்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


இவர் கடந்த 2005ஆம் ஆண்டிலிருந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். தற்போது இவருக்கு 28 வயதாகிறது. கடந்த 2005ஆம் ஆண்டு தமிழில் வெளியான கண்ட நாள் முதல் என்ற படத்தில் அறிமுகமானார். அதன் பின்னர் தற்போது வரை 30 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக சமீபகாலமாக தெலுங்கு மொழி படங்களில் அதிகமாக நடித்து வருகிறார் இந்நிலையில்.

நடிகை ரெஜினாவிற்கும் தெலுங்கு பட உலகின் சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் மருமகனுக்கும் காதல் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் உலா வந்து கொண்டிருக்கிறது. அதற்கேற்றார் போல் இருவரும் ஒன்றாக வெளியிலும் சுற்றி வருகின்றனர். pilla nuvvu leni jeevitham படத்தில் ரெஜினா மற்றும் சிரஞ்சீவியின் சகோதரியின் மகன் நடிகர் சாய் தரன் தேஜ் இருவரும் நடித்தனர்.

அப்போதிலிருந்தே இருவருக்கும் காதல் ஏற்பட்டு உள்ளதாக கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. இது குறித்து சாய் தரன் தேஜிடம் கேட்கப்பட்டதற்கு,  நானும் ரெஜினாவும் நல்ல நண்பர்கள் மட்டுமே வேறு எதுவும் இல்லை என்று கூறியுள்ளார். ஆனால் படப்பிடிப்பு தளத்தில் ரெஜினாவை நடிகர் சாய் செல்லமாக ‘பாப்பா’ என்று அழைப்பாராம்.

அதற்கு பதில் ரெஜினா அவரை தெலுங்கில் மிகவும் மரியாதையாக ‘பாபுகாரு’ என்று கூப்பிடுவாராம். ஆனால் இருவரும் இருவருக்கும் காதல் இல்லை என்று தற்போது வரை சப்பைக்கட்டு கட்டுகின்றனர்.