ஒரே டம்ளரில் 5 சுவைகளில் காஃபி! கோவையை கலக்கும் டீ மாஸ்டர்!

கோவை துடியலூர் அருகே ஒரு டீ கடையில் ஒரே டம்ளரில் ஐந்து விதமான சுவையுடன் காபி போட்டு டீ கடைக்காரர் ஒருவர் அசத்தி வருகிறார்.


கோவை துடியலூர் அருகே கணுவாய் பகுதியைச் சேர்ந்தவர் மாணிக்கம் 56. , இவருக்கு திருமணமாகி மனைவியும் ஒரு மகளும் ஒரு மகனும் உள்ளனர் இந் நிலையில் இவர் அதே பகுதியில் உள்ள டீக்கடையில் 40 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்துள்ளார். பின்னர் எப்போதும் போல் காப்பி போடாமல் ஒரு புது முயற்சியாக ஒரே டம்ளரில் ஐந்து வகையான சுவையுடைய காபி போட திட்டமிட்டுள்ளார்.

 இதையடுத்து பல முறை பயிற்சி செய்தும் தோல்வியில் முடிந்தது. தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே இருந்த மாணிக்கம் முதலில் டிக்காசன் மற்றும் பால் இரண்டையும் தனித்தனியே ஒரே டம்ளர்களில் போட்டுள்ளார்.

இந்த வெற்றியை தொடர்ந்து  பால், பூஸ்ட், ஹார்லிக்ஸ், டிக்காஷன், பிளாக் காபி என 5 வகையாக ஒரு டம்ளரில் போட்டு இந்த முயற்சியில் வெற்றியும் கண்டுள்ளார். இந்நிலையில் அவர் கணுவாய் பகுதியில் தனியே ஒரு டீ கடை ஆரம்பித்து அங்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு இந்த மாதிரியான காப்பியை போட்டுக் கொடுத்து வந்துள்ளார்.

இதனால்அவரது கடைக்கு வரும் வாடிக்கையாளர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேதான் இருக்கிறது. இதுகுறித்து மாணிக்கத்திடம் கேட்டபோது: நான் 40 ஆண்டுகளாக ஒரே டீக்கடையில் டீ மாஸ்டராக பணியாற்றி வந்துள்ளேன். இதையடுத்து ஏதாவது ஒன்று புதிதாக செய்ய வேண்டும் என்பதற்காகவே இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் இதில் வெற்றி கண்டு உள்ளதாகவும் பெருமையாக தெரிவித்துள்ளார்.

தான் தனியாக ஒரு காபி கடை போட்டு அங்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு இந்த புது மாதிரியான காப்பியை போட்டுக் கொடுத்து வருகிறேன். பலரும் இதற்காக தன்னை பாராட்டியதாகவும் மாணிக்கம் பெருமையுடன் தெரிவித்துள்ளார்.