கட்டு கட்டாக பணம்! பறக்கும் படையிடம் சிக்கிய புஷ்பவனம் குப்புசாமி தம்பதி!

சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் அருகே கோவில் திருவிழாவில் கச்சேரி முடித்துவிட்டு 57 ஆயிரம் பணத்துடன் காரில் வந்த நாட்டுப்புற பாடல் கலைஞர் புஷ்பவனம் குப்புசாமி மற்றும் அணிதா குப்புசாமி ஆகியோர் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இச்சம்பவம் அப்பகுதியல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஜலகண்டாபுரம் பேருந்து நிலையத்தில் உள்ள உருத்திர வன்னிய மகாராஜா திருக்கோவில் கும்பாபிஷேக விழா நேற்று சிறப்பாக நடைப்பெற்றது. இந்த கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு நாட்டுப்புற பாடல் கலைஞர்கள் புஷ்பவனம் குப்புசாமி மற்றும் அணிதா குப்புசாமி ஆகியோர் நாட்டுப்புற கச்சேரி நடத்தினர்.

பின்னர் கச்சேரியை முடித்துவிட்டு 50 ஆயிரம்  பணத்தைப் பெற்றுக் கொண்டு காரில் சேலத்தை நோக்கி சென்ற போது ஜலகண்டாபுரத்திலிருந்து தாரமங்கலம் செல்லும் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்ட மணிகண்டன் தலைமையிலான தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் காரை நிறுத்தி சோதனை செய்தனர்.

அப்போது புஷ்பவனம் குப்புசாமி வைத்திருந்த 57 ஆயிரம் ரூபாய் பணத்தை உரிய ஆவணமின்றி கொண்டு செல்வதாகவும் இதனால் அந்த பணத்தை பறிமுதல் செய்வதாகவும் தெரிவித்தனர். இதனால் ஆத்திரமடைந்த புஷ்பவனம் குப்புசாமி மற்றும் அனிதா குப்புசாமி ஆகியோர் தேர்தல் பறக்கும் படை அதிகாரியிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் பணம் கொடுத்த கோவில் நிர்வாகிகள் சம்பவ இடத்திற்கு வந்து தாங்கள் தான் பணம் கொடுத்ததாக பேப்பரில் எழுதி கையெழுத்திட்டு கொடுத்த பின்னர் அனுப்பி வைக்கப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.