அந்த புகைப்படம் கேட்டு நச்சரித்த ரசிகர்! கேட்டதை அனுப்பி வைத்த சின்மயி!

நச்சரித்த ரசிகருக்கு பிரபல பாடகி சின்மயி அனுப்பிய புகைப்படம் வைரலாகி வருகிறது.


பிரபல பின்னணி பாடகி சின்மயி சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருப்பவர். அரசியல் சமுதாயம் சினிமா பெண் உரிமை போன்ற விவகாரங்கள் குறித்து தொடர்ச்சியாக தனது ட்விட்டர் பக்கத்தில் சின்மயி கருத்து தெரிவித்து வருகிறார். அந்த வகையில் அவருக்கு ட்விட்டரில் ஏராளமான பின் தொடர்பாளர்கள் உண்டு.

அவ்வப்போது இவர்கள் சின்மயிடம் ஏதேனும் கேட்பதும் அதற்கு சின்மயி அளிக்கும் பதிலும் வைரலாகும். அந்த வகையில் ரசிகர் ஒருவர் நீண்ட நாட்களாக சின்மயிக்கு பிரைவேட் மெசேஜ் நிர்வாண புகைப்படத்தை அனுப்புமாறு கேட்டுக் கொண்டே இருந்துள்ளார். அதாவது உன்னுடைய நியூட் புகைப்படங்களை அனுப்பு என்று அவர் இன்மையே எச்சரித்துள்ளார்

பொறுத்துப் பொறுத்துப் பார்த்த சின்மயி ஒரு கட்டத்தில் நியூட் புகைப்படங்களை அனுப்பி உள்ளார். அதாவது அவர் அனுப்பியது அவரது நியூட் புகைப்படம் அல்ல. நியூட் எனும் பிராண்டின் லிப்ஸ்டிக் புகைப்படத்தை சின்மயி அனுப்பியுள்ளார். அது மட்டுமல்லாமல் தன்னுடைய நிர்வாண புகைப்படத்தை கேட்ட அந்த ரசிகரின் புகைப்படத்தையும் வெளியிட்டு நல்ல பொழுதுபோக்கு என்று கூறியுள்ளார் சின்மயி.