ராதாரவி மீது புதிய பாலியல் புகார்கள்! மீண்டும் களம் இறங்கிய பாடகி சின்மயி!

நடிகர் ராதாரவி மீது பிரபல பாடகி சின்மயி மீண்டும் பரபரப்பு புகார்களை கூற ஆரம்பித்துள்ளார்


தான் கூறிய பாலியல் புகார்களுக்காக தன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில் பாலியல் பலாத்கார் ஜோக்குகள் சொல்லும் ராதாரவி மீது ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று பின்னணிப் பாடகி சின்மயி கேள்வி எழூப்பியுள்ளார். 

திரையுலகில் பலர் மீது பாலியல் புகார்களைக் கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர் சின்மயி. கடந்த ஆண்டு இவர் கவிஞர் வைரமுத்துவின் மீது மீ டூவின் கீழ் புகார் தெரிவித்தார். இதையடுத்து அவர் டப்பிங் யூனியனில் இருந்து அவர் வெளியேற்றப்பட்டார். மேலும் பலர் மீது அவர் புகார் தெரிவித்ததையடுத்து சின்மையிக்கு எதிராக ராதாரவி கருத்துக்களை தெரிவித்து வருகிறார். 

இந்நிலையில் ராதாரவி பெண்களை அவமானப் படுத்தும் வகையிலும், ஆண்களை பாலியல் பலாத்காரம் செய்ய ஊக்கப்படுத்தும் வகையில் பேசி வருவதாக சின்மயி குற்றம்சாட்டியுள்ளார். கதாநாயகிகளின் கன்னித் தன்மை பரிசோதனை செய்யப்பட வேண்டும் என அவர் இசைவெளியீட்டு விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பேசி வருவதாகவும் கூறியுள்ளார். 

தன்னைப் போன்றவர்கள் பேசக் கூடாது என்று தடைவிதித்து டப்பிங் யூனியனில் இருந்து வெளியேற்றி நடவடிக்கை எடுக்கப்பட்டது பொல அவரை இன்னும் ஏன் எவரும் எதுவும் கேட்க வில்லை என சின்மயி கேள்வி எழுப்பியுள்ளார். இதனிடையே சின்மயி தேசிய மகளிர் ஆணையத்தில் வைரமுத்து மீது புகார் அளித்துள்ளார்.